ரியலா? ரீலா?




ரீல்: தேரைகளைத் தொட்டால் மருக்கள் ஏற்படுமா?

ரியல்: தேரைகளை தொடக்கூடாது என்பதற்காக ஹமாம் அம்மாக்கள் சொல்லிய பச்சைப் பொய் அது. தவளைகள், தேரைகள் பொதுவாக ஈரப்பதமான இடத்தில் வாழ்பவை. தேரை களின் தோலில் உள்ள மரு அமைப்புகள் வறட்சியான சூழலை தாக்குப்பிடித்து வாழ உதவுகின்றன. அதோடு தவளைகள் கடிக்காது என்பதே நிஜம்.

ரீல்: சிலந்திகளில் அதிக விஷத்தன்மை கொண்டது Daddy longlegs என்ற வகை.ரியல்: Daddy longlegs என்ற சிலந்திகள் கடித்த  மனிதர் களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக எந்த அறிவியல் பதிவும் இல்லை என்பதே ஆய்வு உண்மை. ரீல்: நெருப்புக்கோழிகள் தலையை மண்ணில் புதைத்துக்கொள்ளும்.

ரியல்: நெருப்புக்கோழிகள் உணவை டைஜஸ்ட் செய்ய கூழாங்கற்களையும் மண்ணையும் தின்னும் நிஜத்தை  டெவலப் செய்த வதந்தி இது. தலையை மண்ணுக்குள் புதைத்தால் நெருப்புக்கோழியால் எப்படி மூச்சுவிடமுடியும்? என்ற லாஜிக்கை உணர்ந்தால் ரீலை கண்டு
பிடித்துவிடலாம்.