உலகநாடுகளின் AI ரேஸ்!



“உலகின் எதிர்காலம் செயற்கை அறிவு எந்திரங்களின் வளர்ச்சியைப் பொறுத்ததே. இது ரஷ்யாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும்தான். அதை யார் ஆளமுடி கிற தோ அவர்கள்தான் உலகின் லீடர்” என 16 ஆயிரம் பள்ளிகளில் காணொளிக்காட்சி  மூலம் மாணவர்களிடையே உரையாற்றியிருக்கிறார் ரஷ்ய அதிபர் புடின்.

ஏறத்தாழ ராணுவ பலத்தை AI மூலம் அதிகரிப்பதில் ரஷ்யாவின் முனைப்பை காட்டுகிற இந்த பேச்சு, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் போட்டியையும் மறைமுகமாக கூறுகிற ஒன்று. தானியங்கி ட்ரோன்கள், ஆயுத வாகனங்கள் ஆகியவற்றில்  AI  பின்னாளில் வீரர்
களின் வலிமையை அதிகரிக்கக்கூடும்.

“அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எதிர்கால ராணுவ  பலம்  செயற்கை  அறிவை முன்வைத்தே அமையும்” என்கிறார் தேசிய பாதுகாப்புத்துறை அதிகாரியான கிரிகோரி சி ஆலன். சீனாவின் பாதுகாப்பு கவுன்சில் 2030 க்குள் ஏஐ மூலம் ஆயுத பலத்தை உயர்த்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்கா ஆயுதங்களை கட்டுப்படுத்தி இயக்கும் மென் பொருட்களைக் குறித்த ஆய்வில் வேகம் காட்டுகிறது. ஆட்டோமேஷன் மற்றும் ஏஐ என இரண்டிலும் ரஷ்யா பின்சீட்தான்.

2025 க்குள் ராணுவத்தில் 30% ரோபோமயமாக்கம் என தீவிரமாக செயல்பட்டு வரும் ரஷ்யா, சிறியவகை ட்ரோன் தயாரிப்பில் முனைப்பு காட்டுகிறது. தனது ஏஐ தொடர்பான அறிவை ரஷ்யா 2016 தேர்தலில் பயன்படுத்தியது அனைவரும் அறிந்ததே. AI போட்டி கடுமையாகி வருவது காணும் நிஜம்.