பாதுகாப்பு தரும் மில்லியன் மைல் லைட்!



மில்லியன் மைல்லைட், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான பேட்டரியற்ற பாதுகாப்பு லைட். சாலையில்   இரவில்   ஜாலியாக வாக்கிங் செல்பவர்,  தடகள வீரர், பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கு உதவும் இந்த லைட்டை எளிதாக ஆடையில் பொருத்தலாம். அதற்கான கனெக்‌ஷன் கார்டும் இதில் உண்டு.

360 டிகிரியிலும் இதன் ஒளி பாய்வதால், நாயின் கழுத்துப்பட்டையில் இதை அணிவித்தால் தெளிவாகத் தெரியும். பேட்டரியற்ற, சார்ஜ்  தேவையற்ற லைட் இது. டாம்  லாடனின் கண்டுபிடிப்பான இதனோடு குழந்தைகளுக்கான புத்தகமும் உண்டு. 40 கிராமில் 200மீட்டர் அளவு ஒளிரும் இந்த லைட் வாட்டர்ப்ரூ ஃப் வசதி கொண்டது. விலை ரூ. 1,105.