சர்ச்சை வழக்கு விசாரணைகள்!



உலகில் பல்வேறு வழக்குகள் கிடப்பில் கிடந்தாலும் அவற்றில் சில மட்டுமே மக்கள் கவனத்தை மேக்னட்டாய் இழுக்கும்.இதோ அவற்றில் சில வழக்குகள்!

லியோன் ஸோல்கோஸ் வழக்கு!

இருபதாம் நூற்றாண்டின்புகழ்பெற்ற வழக்கு இது.வெறும் 8 மணி நேரம் விவாதிக்கப்பட்டது என்பதுதான்இதில் ஆச்சரியம். 1901 ஆம் ஆண்டு செப். 6 அன்று அதிபர் வில்லியம் மெக்கின்லே பான் அமெரிக்கன் எனும் கட்டிட வடிவமைப்பாளர்களின்கண்காட்சியை திறந்து வைத்து மக்களை வரவேற்றார்.

அப்போது புரட்சிக்காரரான லியோன் அதிபரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.  ஏன்? பணக்காரர்களுக்கு  மட்டுமே அதிபர் உதவுகிறார் என்ற கோபம்தான் காரணம்.அதிபர் பரலோகம் போய் எட்டு நாட்களானபிறகு, வழக்கு தொடங்கியது. 1901 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று, லியோனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சார்லஸ் மேன்ஷன் வழக்கு!

அமெரிக்காவில் 1969 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த சீரியல் திகில் கொலைகள் மக்களை அதிரவைத்தன. அதில், பிரபல திரைப்பட இயக்குநரானரோமன் போலான்ஸ்கியின் எட்டு மாத கர்ப்பிணி மனைவி ஷரோன் டாடேவும் ஒருவர். சார்லஸ்மேன்ஷன் என்பவர் கொலைக்  குற்றவாளி. கோர்ட்டில் சார்லஸ் மற்றும்  அவரது  குடும்பத்தினரும் தலையை  மழித்து மந்திரம்  சொல்லி வழக்கு விசாரணையை ஜாலி பிக்னிக்காய் எடுத்துக்கொண்டனர். 1971 ஆம்  ஆண்டு ஜனவரியில் சார்லஸ் குடும்பத்தாருக்கு மரண தண்டனை சாங்க்‌ஷன்ஆனது. பின்னாளில் இது ஆயுள் தண்டனையாக்கப்பட்டது.

ஓ. ஜே. சிம்சன் வழக்கு

1994 ஆம்ஆண்டு ஜூன் 13 அன்று மிட்நைட்டில் சிம்ப்சனின்முன்னாள் மனைவியான நிக்கோல் ப்ரௌன்,  மனைவியின் பாய் ப்ரெண்ட் ரொனால்ட்கோல்ட்மேனும் படுகொலை செய்யப்பட்டனர். இருவரும் கொல்லப்பட்ட இடத்தில்சிம்ப்சனின் ரத்த மாதிரிகள், அங்கிருந்த 12 இன்ச் ஷு தடம், அங்கிருந்த சாக்ஸில் நிக்கோல் மற்றும்சிம்ப்சனின் ரத்தக்  கறைகள் அவர் மீது குற்றம்சாட்ட சூப்பர்  சாட்சியங்கள்.

அதேவேளையில் போலீசார் மீது இனவெறி புகார் சர்ச்சை கிளம்பியது. வழக்கில் ஓ.ஜே.சிம்ப்சன் விடுதலையானார். 1997 ஆம் ஆண்டு கோல்ட்மேன்குடும்பத்தினர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்து தோல்வியுற்ற சிம்ப்சன், 2008ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி மற்றும் கடத்தலுக்காக 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 

மைக்கேல் ஜாக்சன் வழக்கு!

2000 ஆண்டிலேயே பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மீது குழந்தைகளை தவறாக பயன்படுத்துகிறார் என கேஸ் பதிவானது. 2003 ஆம் ஆண்டு இந்த குற்றச்சாட்டுக்கு சாட்சிபோல மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளுடன் படுக்கையில் உறங்குவது போல ‘லிவிங் வித் மைக்கேல் ஜாக்சன்’டாகுமெண்டரி ரிலீசானது.

2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாக்சனின் வீடு ரெய்டுக்குள்ளாகி, நவம்பர்20 அன்று ஜாக்சனை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.2005 ஆம் ஆண்டு ஜனவரி 31 வழக்கு விசாரணை தொடங்கியது. ஜாக்சனுக்கு எதிரான சாட்சி, கேன்சர் நோயாளி சிறுவன். பிறகு ஜூன் 13 அன்று ஜாக்சன் ஜூரிகளால் வழக்கிலிருந்து விடுதலையானார். 2009 ஜூன் 25 அன்று மைக்கேல் ஜாக்சன் காலமானார்.

விக்டர் காமெஸி