அமெரிக்காவில் மெகா கொள்ளை!



அமெரிக்காவைச் சேர்ந்த Equifax Inc நிறுவனத்தின் மீது 30க்கும் மேலான வழக்குகள் பதிவாகிவிட்டன. எதற்காக? மக்களின் கிரடிட் கார்டு தகவல்களை திருடர்களிடம் கோட்டை விட்டதற்காக. ஏதோ ஒருவர் இருவரல்ல, 143 மில்லியன் அமெரிக்கர்களின் தகவல்கள் அம்பேல்!

நடந்த பிரச்னையை லேட்டாக அடையாளம் காணும் வழக்கப்படி ஜூலை 29 அன்றுதான் திருட்டை கண்டு பிடித்தது ஈக்யூஃபேக்ஸ். உடனே மக்களை, மக்களின் சமூக பாதுகாப்பு எண் உள்ளிட்ட எண்களை பாதுகாக்கும் விதிகளை பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டது.

சிலரது வழக்குகள் அட்லாண்டாவில் செயல்பட்டு வரும் ஈக்யூஃபேக்ஸ்  நிறுவனத்தின் இலவச சேவைகளால் பிரச்னை  என்றும், இன்னும் சிலர் தகவல் திருட்டு என ஈக்யூஃபேக்ஸ் கூறுவதே பயனர்களை காஸ்ட்லியான தனது ப்ரீமிய சேவைகளுக்கு நகர்த்தத்தான் என ஆக்ரோஷமாக புகார் மனுவில் கூறியுள்ளனர்.

குறைந்த கட்டண சேவை இலவசம் என்பதே புதிய ப்ரீமியம் சேவைகளை அறிவிக் கவும், பொருட்களை அறிமுகப்படுத்தவும்தானே என சிம்பிள் பதிலை சொன்னது ஈக்யூஃபேக்ஸ். சரமாரியான புகார்கள் காரணமாக 3.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20.7% சரிவைச்  சந்தித்துள்ளது.