ஏன்? எதற்கு? எப்படி?



மக்கள் கூட்டத்தை கலைக்க பாதுகாப்பான ஆயுதம் எது?

உண்மையில் மக்கள்கூட்டத்தை கலைக்க பாதுகாப்பான ஆயுதம் எதுவுமில்லை என்பதே நிஜம். ரப்பர்குண்டுகளில் சுட்டால் ஆபத்தில்லைதான், ஆனால் தலையில்பட்டால் பிரச்னை. டேசரில் வரும் மின்சாரம் இதயநோய்கொண்டவர்களை நிரந்தர அமைதியாக்கிவிடும். தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது அதிக பாதிப்பில்லை என்றாலும் கீழே தள்ளி, கூட்டத்தில் தள்ளுமுள்ளு பாதிப்பு உண்டாக்குகிறது.

தற்போது ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்படவிருக்கும் ஏடிஎஸ் எனும் குற்றலைகள் இதில் வேறுரகம். இந்த அலைகள் குறிப்பிட்ட அலைவரிசையில் ஒருவரின் மீது படும்போது தோல் எரியும் உணர்வெழ, 5 நிமிடங்கள்தான் தாக்குப்பிடிப்பார். பிறகென்ன, எஸ்கேப் ஓட்டம்தான். இந்த ஆராய்ச்சியில் மிகச்சிலருக்கு மட்டும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

Mr.ரோனி