இணையத்தில் பாதுகாப்பு!



இணைய பாதுகாப்பு தரும் இலவச மென்பொருட்கள் இதோ...!

Ghosteryஇணையத்தில் உலவும் உங்களை பின்தொடர்ந்து பொருட்களை விற்க இன்டர்நேஷனல் அண்ணாச்சிகள் உண்டு. இதனை இன்ஸ்டால் செய்தால் போதும், யார் உங்களை  பின் தொடர்கிறார்கள் என்று அறியலாம்.

Keyscrambler

நீங்கள் பிரவுசரில் டைப் செய்யும் வார்த்தைகளை கீஸ்க்ராம்ப்ளர் என்க்ரிப்ட் செய்து டைப் செய்வதை கண்டறியும் மென்பொருட்களையும் ஏமாற்றுகிறது.

Tails

லினக்ஸில் பயன்படுத்தும் பிரைவசி மென்பொருள் இது. இமெயில், மெசேஜ் என அனைத்திலும் நம் ரகசியங்களை ரகசியமாக காக்கும் மென்பொருளுக்கு NSA எட்வர்ட் ஸ்னோடனே சூப்பர் ரேட்டிங் கொடுத்துள்ளார்.

Wise folder hider

விண்டோஸுக்கான ஸ்பெஷல் பாதுகாப்பு மென்பொருள் வைஸ் ஃபோல்டர் ஹைடரின் மூலம் பலரும் புழங்கும் கம்ப்யூட்டரில் நமது ஆபீஸ் கோப்புகளை பாதுகாக்கலாம். இதன் பாதுகாப்பு மினிமம் என்றால், பணம் கட்டி பாதுகாப்பை கூடுதலாக்கலாம்.

ராஜிராதா