நியூஸ் பிட்ஸ்!



கர்நாடகாவின் கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட் நிறுவனம் மைசூர் மில்லினியம் என்ற பெயரில் தயாரித்துள்ள சந்தன சோப்பின் விலை ரூ. 750. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோப்புகளிலேயே இது விலையுயர்ந்தது.
  
சீனாவை தாயகமாகக்  கொண்ட  லிச்சிப்  பழம், சாப்பாட்டிற்குப்  பிறகு உண்ணப்படும் பழவகைகளில் ஒன்று. பழச்சுளை புளிப்பும் துவர்ப்புமானது. காய்ந்தபிறகு அசத்தல் இனிப்பு கொண்டது.
  
1952 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், மணிப்பூரில் 4 முறை முதல்வராக இருந்தவருமான ரிஷாங் கெய்ஷிங் (நாகா இனம்), மணிப்பூருக்கு தனி மாநில அந்தஸ்து கோரி போராடியவர்.
  
ஆங்கிலேய அறிவியலாளர் வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்க எலக்ட்ரிசிட்டி என்ற  சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். இச்சொல் கிரேக்கச்சொல்லான எலக்ட்ரான் என்ற என்பதிலிருந்து தோன்றியது.

க. ரவீந்திரன்