திருடுபோகாத எக்ஸ்டெர் பர்ஸ்!



பர்ஸை வாங்கி அதில் உழைத்து சேர்த்த பணத்தோடு பர்ஸும் மிஸ்ஸிங் என்றால் விரக்தி சுனாமியாகாதா? இச்சூழலைத் தவிர்க்கிறது  எக்ஸ்டர் பர்ஸ். 

இதன் ஸ்மார்ட் நுட்பம் மூலம் எளிதில் ஏடிஎம் கார்டுகளை காப்பதோடு, யார் களவாடினாலும் அவர்களை ஃபாலோ செய்து கைக்கு காப்புகூட மாட்டலாம். 3 மணி நேர சூரிய சக்தியைப் பெற்று, 1 மாதம் ஆக்டிவாக இயங்கும் பர்ஸ் இது.

7 கார்டுகள் வைக்க முடியும் இந்த வாலெட்டில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ஒத்திசைவு உண்டு. ட்ராக் ஆர் டெக்னாலஜி மூலம் பர்ஸை பதம் பார்த்தவர்களையும் எளிதாக கண்டறியலாம். இதற்கு ட்ராக் ஆர் ஆப்பை ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்து ப்ளூடூத் மூலம் ட்ராக் கார்டை பின்தொடர்ந்தால் போதும். மேலும் இந்த ட்ராக் கார்டை உங்களது ஸ்மார்ட் போன்களுக்கும் கூட பயன்படுத்தலாம்.

 RFID/NFC ஆகிய தொழில்நுட்பம் மூலம் ஏடிஎம்  கார்டு  உள்ளிட்ட  வற்றிலிருந்து தகவல் திருட்டையும் தடுக்கலாம். உயர்தர லெதரில், மிக மெல்லிய எக்ஸ்டெர் பர்ஸின் விலை ரூ. 4592.