விசா இல்லாமல் சுற்றுலா!ஒவ்வொன்றுக்கும் பர்மிஷன் கேட்டு, இன்டர்வியூ பாஸ் செய்து செல்வதற்கு நாம் செல்வது டூரா, இல்லை வேலையா என நொந்த உள்ளங்களுக்கு ஸ்வீட் குல்கந்து இதோ! விசா இல்லாமல் சுற்றுலா செல்லும் சொர்க்கங்களும் உலகில் உண்டு. அவை பூடான், மாலத்தீவுகள், மொரீஷியஸ், நேபாளம்.  பூடான்உலகளவில் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் நிறைந்த ஊர் இது.

39 ஆயிரத்து 394 கி.மீ பரப்பளவிலான நாடு. தலைநகரம் திம்பு. நீர்மின் நிலையங்களின் மின் உற்பத்தியே  வருமான ஆதாரம். பூடானின் உயரமான மலைச்சிகரத்தின் பெயர் கங்கார் புயென்சும். இது உலகில் இதுவரை யாரும் ஏறாத சிகரமாகும்.

நேபாளம்

உலகின் 8 உயரமான மலைச்சிகரங்களைக் கொண்ட தொன்மை கலாச்சார நாடு. தலைநகரம் காட்மாண்ட். 1,47,181 ச. கி.மீ பரப்பிலான இந்நாட்டில்தான் (லும்பினி) புத்தர் பிறந்ததும், எவரெஸ்ட் மலைச்சிகரம் இருப்பதும். சுற்றுலா, நீர்மின்சாரம்தான் வருமான ஆதாரம். முதலில் இந்து நாடு என்றாலும் தற்போது மதச்சார்பற்ற நாடு.

மொரீஷியஸ்

கடல் உணவுகள், சேகா டான்ஸ் என அதகளப்படுத்தும் 2 ஆயிரத்து 40 கி.மீ பரப்பிலான இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள ஆப்பிரிக்க பகுதியைச் சேர்ந்த தீவு. தலைநகரம் போர்ட் லூயிஸ். முதன்மை மொழி ஆங்கிலம். பொருளாதாரம் தாராள  மயம் என்பதால் முதலீடுகள் குவிகின்றன. டோடோ பறவை இறுதியாக முற்றாக அழிந்துபோனது இத்தீவில்தான். ஆப்பிரிக்கத் தீவுகளிலேயே இங்குதான் இந்துமதத்தினர் அதிகம்.

- ராஜிராதா, பெங்களூரு.