சூப்பர்ஹிட் அறிவியல் புத்தகங்கள் 2016!




அண்மையில் சயின்ஸ் நியூஸ் இணையதளம், தேர்ந்தெடுத்து பட்டியலிட்ட 2016ம் ஆண்டின் ஹிட் ஹாட் அறிவியல் நூல்களின் தொகுப்பு இதோ!

லேப் கேர்ள்ஹோப் ஜாரென்கநோப் பதிப்பகம்

தாவரங்களின் மேல் தீராத காதல் கொண்ட நுண்ணுயிரியாளரின் வாழ்க்கையைப் பேசுகின்ற சுவாரசிய நூல் இது. விலை ரூ. 1833

கிளாஸ் யூனிவர்ஸ்டாவா சோபெல் வைகிங் பதிப்பகம்

ஹார்வர்டு ஆய்வகத்தில் பணியாற்றிய 19-20 ம் நூற்றாண்டுப் பெண்கள் வானியலுக்கு ஆற்றிய ஆக்கபூர்வ பங்களிப்புகளைக் குறித்த கட்டுரை நூல் இது. விலை ரூ.2040

தி ஜீன்சித்தார்த்தா முகர்ஜி சைமன் சைசுஸ்டெர் பதிப்பகம்

மனிதர்களின் அடிப்படையான ஜீன் குறித்து இதுவரை செய்த அறிவியல் ஆராய்ச்சிகள், சிந்தனைகள் ஆகியவற்றோடு தனது அனுபவங்கள், கருத்துக்களையும்  சேர்த்தளித்திருக்கிறார் மருத்துவரும் புலிட்சர் விருது வென்ற எழுத்தாளருமான சித்தார்த்தா முகர்ஜி. விலை ரூ. 2176

தி செவன் ஸ்கெலிடன்ஸ்லிடியா பைன்வைகிங் பதிப்பகம்

உலகமெங்கும் கிடைக்கும் நம் மூதாதையர் களின் படிமங்களைப் பெற்று ஆராய்ந்து அதன் வழியாக மானுடவியலின் வரலாற்றுத் தடம் தேடி செல்லும் நூல் இது. விலை ரூ. 1904

சைலன்ட் ஸ்பார்க்ஸ் சாரா லூயிஸ் பிரின்ஸ்டைன் பல்கலைக்கழகம்,

உயிரியலாளரும் ஆசிரியையுமான சாரா, இந்நூலில் கூறும் தகவல்களை படிப்பவர்கள், பால்யத்தில் தட்டான்பூச்சி தேடிச்சுற்றியதை, மின்மினியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதை உணரலாம். விலை ரூ. 2037

-எம்.பனிமலர்