சொக்கவைக்கும் அழகுப் பேனாக்கள்!



எவரெஸ்ட் விலையில் பேனாவை வாங்கிவிட்டு 12 ரூபாய்க்கு மை ஊற்றி எழுத முடியுமா என்பது மெகா டவுட்தான். இஎம்ஐயிலாவது வாங்கலாமா என யோசிக்க வைக்கும் பேனாக்களின் சூப்பர் அம்சங்களைப் பார்க்க என்ன தடை?

லா மாடர்னிஸ்டா வைர பேனா

இந்த பேனாவில் எழுதுவதா என யோசிக்கவைக்கும் இப்பேனா, காரன் டிசே எனும் ஸ்விஸ் நிறுவன தயாரிப்பு. ரோடியம் முலாம் பூசப்பட்ட வெள்ளி  உலோகத்திலான வார்ப்பில் 20 கேரட் தரத்தில் 5,072 சிறு வைரக்கற்களும் கொண்ட இப்பேனாவில் 96 ரூபி கற்களும் ஜொலிக்கின்றன. அன்டோனியோ கவுடி உருவாக்கியுள்ள தங்க நிப்  பேனாவின் விலை  1 கோடியே 80 லட்சத்து 83 ஆயிரத்து 547 ரூபாய்தான்.

ஓமஸ் பீனிக்ஸ் பிளாட்டினம் பேனா

18 கேரட் தரத்தில் தங்க நிப் கொண்ட பிளாட்டினத்தில் உருவான லிமிடெட் எடிஷன் பேனா இது. கூம்பு வடிவத்தில் பார்க்க படு ஃபேன்சி டிஸைனில் கண்ணைப் பறிக்கும் இப்பேனாவின்  விலை 40  லட்சத்து  94 ஆயிரத்து 388 ரூபாய்.

டெபால்டி ஃபவுண்டன் பேனா

புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனமான பென்ட்லி மற்றும் இத்தாலிய நிறுவனமான டெபால்டியோடு இணைந்து உருவாக்கிய
இப்பேனாவின் நிப் 18 காரட் தங்கத்தினால் உருவானது. பேனாவைத் திறக்காமலேயே இங்க்கின் அளவு அறியலாம். லிமிடெட் எடிஷனாக, தயாரிக்கப்பட்டுள்ளவை 80 பேனாக்கள்தான். இதன் விலை 29 லட்சத்து 34 ஆயிரத்து 311 ரூபாய்.

- க. ரவீந்திரன், ஈரோடு.