உடலைக் கட்டமைக்கும் ரிபோஸ்



உடல் மொழி ரகசியங்கள் 20

‘ரிபோஸ்’ - DNA மற்றும் RNA, இரண்டிலும் கார்போைஹட்ரேட்கட்டமைப்புப் பகுதியாகப் பயன்படுகிறது. மேலும், வைட்டமின் பி2, பி12 இரண்டிலும், ஏடிபி கட்டமைப்பு பொருளாகவும் ரிபோஸ் பயன்படுகிறது. ரிபோஸ் துணைஉணவு ஏடிபி அளவை உயர்த்துவதாக ஆராயப்பட்டுள்ளது. மாரத்தான் பந்தய வீரர்களும், ஆணழகு வீரர்களும் ‘ரிபோஸ்’ துணை உணவாக சாப்பிடுவதன் மூலம் உடல்வலிமை கூடி செயல்திறன் உயர்கிறது. ரிபோஸ் துணை உணவு உடல் மைட்டோகாண்ட்ரியத்தின் செயல்திறனை உயர்த்துகிறது.

எனவே செல்களில் ஆற்றலை கூடுதலாக தேக்கி வைக்க முடிகிறது. நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில்  நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆணழகு வீரர்களுக்கு, தினசரி  10 கி. ரிபோஸ் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது. ஆராய்ச்சிமுடிவில் துணை உணவாக ‘ரிபோஸ்’ சாப்பிட்டவர்களின் உடல் வலிமை பெருகி, செயல்திறன் அதிகரித்திருந்தது.

போலி மாத்திரை மட்டும் கொடுக்கப்பட்ட உடல்பயிற்சியாளர்களோடு ஒப்பிட்டு கண்டறியப்பட்ட அளவீடு இது. கட்டமைப்புத்தூண் ரிபோஸ், ரிபோஸ் துணை உணவு, இதயம் செயலிழப்பு, நோயாளிகளின் இதயத்தசை ஆற்றலை உயர்த்தி,  அதன் செயல்திறனை மேம்படுத்துவதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

கடும் உழைப்பினால் உடல் தசைகளில் ஏற்படும் கடும்வலி, விறைப்புத்தன்மை ஆகியவற்றையும் குறைக்கிறது. இத்தகைய நன்மைகளுக்குக் காரணம் ரிபோஸ் ‘பயோஎனர்ஜெடிக்ஸ்’செயல்திறனை உயர்த்துவதால், ஏடிபி உருவாகும் அளவு பெருகி, செல்களில் அதன் பற்றாக்குறை தீர்வதால்தான்.  

இதயம் மற்றும் தசைச்செல்களுக்கு, போதிய ரத்தம்இல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறையாலோ (அ) இவை கடுமையாக நீண்ட நேரம் உழைப்பதாலோ, ஏடிபி பெருமளவில்குறைந்துவிடும். உடல் ஒவ்வொரு நாளும் மறுசுழற்சி செய்து ஏடிபியை பயன்படுத்துகிறது. மறுசுழற்சி அளவு, நமது உடலின் மொத்த எடைக்கு இணையாக தினசரி நிகழ்கிறது. ஏடிபி உருவாக்கப்படவும், அதை  மறுசுழற்சி செய்யவும், உடல்செல்களுக்கு போதிய அளவில் ‘அடினின் நூக்ளியோடைட்ஸ்’ வேதியம் தேவை.

இந்த வேதியம் உரிய அளவில் தேவையெனில், ரிபோஸ் போதிய அளவில் இருக்க வேண்டும். உடல் செல்கள் அனைத்தும் ‘ரிபோஸ்’ உருவாக்கினாலும், இதயம் மற்றும் தசைச் செல்களில்  ‘ரிபோஸ்’ கட்டுமானப் பொருள் குறைவானால் ரிபோஸ் உருவாகும் அளவும் குறையும். துணை உணவுகள் உடல் செல்களில்  ‘ரிபோஸ்’ உருவாகும் அளவைஉயர்த்துகிறது. இதயம் மற்றும் தசை செல்களுக்கு உடனடியாக  ‘ரிபோஸ்’ கிடைக்கிறது.   

அண்மை ஆராய்ச்சிகளில், இதய ரத்தக்குழாய் நோய்,  இதயச் செயலிழப்பு ஆகிய நோய்களுக்கு ‘ரிபோஸ்’ மருந்தாகப் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது. போன் பல்கலைக்கழகத்தின் இதய நோய் மருத்துவர் ேஹய்டெர் ஓம்ரான், 15 இதய நோயாளிகளில் ஒரு பிரிவினருக்கு தினசரி 3 வேளை, 5 கி. ‘ரிபோஸ்’ 21 நாட்களுக்கு கொடுத்தார். அதேபோல குறிப்பிட்ட நோயாளிகளுக்கு போலிமாத்திரை கொடுக்கப்பட்டது. ‘ரிபோஸ்’ சாப்பிட்டவர்களின்இதயத்தின் ரத்தம் பாய்ச்சும் செயல்திறன் அதிகரித்திருந்தது.

போலி மாத்திரை சாப்பிட்டவர்களுக்கு முன்னேற்றமேதுமில்லை. ‘ரிபோஸ்’ துணைஉணவு தினசரி 1000 முதல் 2000 மி.கி. உட்கொள்வதால்,  உடலில்   ஆற்றல் பாராட்டும்படி உயர்கிறது. இதய நோயாளிகள் தினசரி 2வேளை, வேளைக்கு 5 கி. உட்கொள்வதால்இதயத்தின் செயல்திறன் கூடுவதோடு இதயம் பாதுகாக்கப்படுகிறது. கிரியாடின் (Creatine): உடல் கட்டமைப்புப் பயிற்சி செய்பவர்கள் ரிபோஸ் போலவே  ‘கிரியாடின்’ பயன்படுத்துகின்றனர்.

இதன் விளைவாக, உடல் வலிமை பெறுவதோடு,  தசைகளின் அளவும் அதிகரிக்கிறது. உடலில் ஏடிபி  ஆற்றல் மறுசுழற்சி செய்யப்படுவதற்கு ‘கிரியாடின்’ முக்கியத் தேவை. உடல் செல்களில் ஏடிபிஆற்றல் வெளியேற்றப்பட்டதும், அது ஏடிபியாக மாற்றமடைகிறது ‘கிரியாடின்’ ஏடிபியை மறுசுழற்சி செயல்முறையில் மிகவிரைவில் ஏடிபியாக மாற்றமடையச் செய்கிறது. உடல்செல்களில், மற்றும்இதயத்தின் செயல்பாடுகளில் பயோஎனர்ஜெடிக்ஸ் மேம்படுவதற்கு ‘கிரியாடின்’ உதவுவது ஆராய்ச்சிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

(ரகசியம் அறிவோம்)

ச.சிவ வல்லாளன்