உருளைக்கிழங்குக்கு வயசு 3800!



அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் 3800 ஆண்டுகள் பழமையான உருளைக்கிழங்கு தோட்டத்தை கனடாவில் கண்டறிந்துள்ளனர்.

கனடாவின பசிபிக் கடல் பகுதியில் வட அமெரிக்க பழங்குடி மக்கள் இதனை தோராயமாக 3800 ஆண்டுகளுக்கு முன்னர் பயிரிட்டிருக்கலாம் என்று ஆய்வுத் தகவலைத் தெரிவிக்கின்றனர். பிரிட்டிஷ் கால கொலம்பியாவில் கட்ஸி பழங்குடிமக்கள் பயிரிட்ட பயிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மட்டுமே முதல் ஆதாரமாக நம்மிடையே உள்ளது.

ஆய்வாளர் தன்ஜா ஹாஃப்மேன், சைமன் ஃபிராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வு செய்து, வளரும் நிலையிலுள்ள உருளைக்கிழங்கு வயலை கண்டுபிடித்துள்ளனர். இதோடு அருகிலேயே மரத்திலான 150 தோண்டும் கருவிகளையும் கண்டு பிடித்துள்ளனர். அக்டோபர்- பிப்ரவரி மாதத்தில் விளைந்து  தயாராகும் இந்த உருளைக்கிழங்குகள் பனிக்காலத்திற்கு ஏற்ற உணவாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சில உருளைக்கிழங்குகள் நன்றாக இருந்தாலும் பல உருளைக்கிழங்குகள் கருப்பு நிறத்திலிருந்தன. சிலவற்றின்  தோல் மட்டுமே மட்கிப்போகாமல் இருந்தன என்கிறது ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை.

- எஸ். கபிலன்குமார்