ஞாபகமறதி மீன்!



மனிதர்களுக்கு ‘ஷார்ட் டைம் மெமரி லாஸ்’ வந்தால் ‘கஜினி’ படம். அதுவே மீனுக்கு வந்தால் ‘Finding Dory’. டோரி என்ற அழகிய நீல மீனுக்கு, 10 நொடிகளுக்கு ஒருமுறை ஞாபகமறதி ஆகிவிடுகிறது.

அதற்கு நினைவில் நிலைத்திருக்கும் ஒரே விஷயம், இளம் வயதில் பெற்றோரிடமிருந்து பிரிந்தது! ஒரு சாகசப் பயணத்தில் அது மீண்டும் பெற்றோருடன் இணைவதே இந்த ஹாலிவுட் அனிமேஷன் படத்தின் கதை!