இரண்டு சூரியன்கள்!



கிரகங்கள் பொதுவாக ஒரு சூரியனைச் சுற்றி வரும் விதமாகவே அமைந்துள்ளன. ஆனால் ஒரு கிரகத்துக்கு இரட்டை சூரியன்கள் இருப்பதை சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கெப்ளர் 1647b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், நமது வியாழன் கோள் அளவில் உள்ளது. பூமியிலிருந்து 3700 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இதன் இரண்டு சூரியன்களில் ஒன்று பெரியது; இன்னொன்று சிறியது.