நம்பினால் நம்புங்கள்



*பிரிட்டிஷ் ராணுவ சர்ஜனாக இருந்த டாக்டர் ஜேம்ஸ் பெர்ரி 1865ல் இறந்த பிறகே, அவர் ஆண் வேடத்தில் இருந்த பெண் என அறியப்பட்டது.

*ஜப்பானில் உள்ள நாகாரோ கிராமத்தில் வாழும் மனிதர்களை விடவும், லைஃப் சைஸ் மனித பொம்மைகளின் எண்ணிக்கை அதிகம்.

*உலகிலேயே மிகப்பெரிய மரம், உலகிலேயே மிக உயரமான மரம்... இரண்டுமே அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில்தான்
உள்ளன.

*உகாண்டா மக்களில் 20 சதவீதத்தினர் பில்லி சூன்யத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்கள்.

*ஃப்ளோரிடா மாகாணத்தில் சலூனில் ஹேர் டிரையர் போட்டுக்கொண்டு உறங்குவது சட்டப்படி குற்றம். சலூன் உரிமையாளராக இருந்தாலும் சரி!

*பண்டைய ரோமானியர்கள் குளிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். தினம் தினம் குளிப்பது மற்ற பகுதிகளில் வழக்கத்தில் இல்லாத காலகட்டத்திலும், அவர்கள் பொதுக் குளியலறைகள் கட்டி அன்றாடம் நீராடினார்கள்.

*ஐசக் நியூட்டன் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று குறைப் பிரசவக் குழந்தையாக பிறந்தார். அப்போது அவர் பிழைத்திருப்பது கடினம் என்றே கருதப்
பட்டது.

*மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கிய 17 வயது இளைஞர் ஒருவர், அதை யாஹூ நிறுவனத்துக்கு 30 மில்லியன் டாலர் மதிப்புக்கு விற்றிருக்கிறார். இதன் மூலம் இளம் வயதில் சொந்த முயற்சியில் மில்லியனர் ஆன பெருமையைப் பெற்றிருக்கிறார் Nick D’Aloisio என்ற அந்த இளைஞர்!

*சூழல் எப்படி இருப்பினும், வாரம் ஒன்று அல்லது 2 முறை கூட குளிக்காதவர்கள் ஆரோக்கியம் அற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

*அமெரிக்காவின் நார்த் டகோடா மாகாணத்தில் ஷூக்கள் அணிந்தபடியே உறங்குவது சட்டப்படி குற்றம்!