பிரியாணியும் பீச்சும் எபோலாவும்!



* ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதி நகரை உருவாக்குகிறார்கள். மலேசியாவில் 9.2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இஸ்காண்டர் எனப்படும் தெற்கு பொருளாதார மண்டலப் பகுதியில் மெடினி என்ற நகரம் கட்டப்பட்டது. இந்த நகரத்தைப் போலவே அமராவதியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை ‘இந்தியாவின் நயாகரா’ என அழைக்கின்றனர். பாகுபலி திரைப்படத்தில் இந்த நீர்வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது.


* 1900லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்களில் அதிக காலம் தொடர்ந்து பிரதமராக இருந்தவர் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர். இவர் 1979 மே 4லிருந்து 1990 நவம்பர் 28 வரை 11 வருடங்கள் 208 நாட்கள் பிரதமர் பதவி வகித்தார். இந்திரா காந்தி தொடர்ச்சி இல்லாமல் 16 வருடங்கள் 15 நாட்கள் பிரதமராகப் பணிபுரிந்து சாதனை புரிந்துள்ளார்.
* அமெரிக்க ஜனாதிபதி களிலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜார்ஜ் வாஷிங்டன் மட்டுமே. இவர் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி.
* சீனாவின் இடம் விட்டு இடம் பெயர்ந்து தாக்கும் ஏவுகணைக்கு ‘நீண்ட பயணம்’ (The Long March) எனப் பெயர் சூட்டியுள்ளனர். 1934-35ல் மாவோ தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புகழ்பெற்ற ‘நீண்ட பயணம்’ நிகழ்ச்சியே இந்தப் பெயர் ஆகியுள்ளது.
* கோவாவில் உள்ள PAOLEM கடற்கரையில் உள்ள தீவில் அமெரிக்க கலைஞர் JACKEY TYLICKI படைத்த பணக் கல் என்ற சிலை உள்ளது. இதில் ‘உங்களிடம் இருந்தால் கொடுங்கள். உங்களுக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்ற வாசகம் உள்ளது (GIVE IF YOU CAN - TAKE IF YOU HAVE TO). மக்கள் இந்த சிலை முன்பு நின்று பணத்தைப் போடுகிறார்கள்; அல்லது எடுத்துச் செல்கிறார்கள்.
* பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் என்ற நகரம் உள்ளது. கடலுக்கும் இந்த நகருக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மத்திய ஆட்சிப் பகுதியான டையூவில் ‘ஜலந்தர்’ என்ற பெயரில் கடற்கரை உள்ளது.
* மத்திய ஆட்சிப் பகுதியான அந்தமானின் ஹேவ்லாக் தீவில் ராதா நகர் பீச் உள்ளது. ‘‘உலகிலுள்ள சிறந்த கடற்கரைகளில் இதுவும் ஒன்று’’ என ‘டைம்’ இதழ் இதை சிறப்பித்துள்ளது.
* கோழிக்கோட்டில் உள்ள KAPPAD கடற்கரையில்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா வந்திறங்கினார்.
* கர்நாடக மாநிலத்தின் கோகர்ணாவில் பாரடைஸ் பீச், ஓம் பீச், அரை நிலா பீச் என்ற பெயரில் கடற்கரைகள் உள்ளன.
* கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள் மற்றும் சிற்பங்கள் நிறைந்த மகாபலிபுரம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளது.
* திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா கடற்கரை, பாபநாசம் என அழைக்கப்படுகிறது. இங்கு குளித்தால் பாவங்கள்
நீங்கும் என நம்பப்படுகிறது.
* கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றில், நறுமண உணவு வகையான ‘ஊன் சோறு’ என பிரியாணி முதன்முதலில் குறிப்பிடப்பட்டது.
* மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திங்களன்று வெள்ளை நிறத்திலும், செவ்வாக்கிழமை சிவப்பு அல்லது பழுப்பு சிவப்பு நிறத்திலும், புதன்கிழமை பச்சை நிறத்திலும், வியாழக்கிழமை மஞ்சள் நிறத்திலும், வெள்ளிக்கிழமை சாம்பல் நிறத்திலும், சனிக்கிழமை கருப்பு நிறத்திலும் ஆடைகளை அணிகிறார்.
* பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஒரு சாதாரண 100 கிராம் எடையுள்ள கடிதத்தை அனுப்புவதற்கு ரூ. 11,75,967 செலவு பிடிக்கும்.
* மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய அமைதியின்மை காரணமாக ஈராக்கில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அழகிப் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக அங்கு 1972ல் அழகிப்போட்டி நடந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அங்கு   நடந்த அழகிப் போட்டியில் கிர்குக் பகுதியைச் சேர்ந்த ஷைம் குவாசிம் ஈராக் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 2015ம் ஆண்டு நவம்பர் 14ல் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் 120 பேர் பலியாகினர். இதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மும்ைப சத்ரபதி டெர்மினல் ரயில் நிலையத்தை பிரான்ஸ் கொடியின் நிறங்களால் அலங்கரிக்க முடிவு செய்தனர். ஆனால் தவறுதலாக நெதர்லாந்து நாட்டுக் கொடி போல அலங்கரித்துவிட்டனர்.
* கேரள மாநிலம் கண்ணனூரில் உள்ள புனித அன்ஜீலோ கோட்டை 500 ஆண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. இதை பிற்காலத்தில் டச்சுக்காரர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சமீபத்தில் இங்கு நடந்த இந்திய தொல்பொருள் துறையினரின் அகழ்வாராய்ச்சியில் 35,000 பீரங்கிக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
* மைக்ரோமேக்ஸ் உரிமையாளர் ராகுல் சர்மா நடிகை அசினை மணம் முடிக்க நிச்சயம் செய்தபோது ரூ.6 கோடி மதிப்புள்ள மோதிரத்தை பரிசாக அளித்தார்.
* உத்தரப் பிரதேச மாநிலத்தில் 368 கடைநிலை ஊழியர்கள் பதவிகளுக்காக 18 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 200 பிஹெச்.டி. பட்டதாரிகளும், 20 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரிகளும் ஒரு லட்சம் பட்டதாரிகளும் அடங்குவர்.
* உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் ஒன்றிலிருந்து இரண்டு சதவீதமே மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
* மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் 2500 பேர் எபோலா என்ற நோயினால் இறந்தார்கள். இப்போது உலக சுகாதார நிறுவனம் கினியா நாட்டை எபோலா இல்லாத நாடாக அறிவித்துள்ளது. இப்போது உலகில் எபோலா உள்ள ஒரே நாடு லைபீரியா. ஒரு எபோலா நோயாளி நோயிலிருந்து குணமான அல்லது கடைசி நோயாளி இறந்த 45 நாட்களுக்குப் பிறகு ஒரு நாடு எபோலாவிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்படுகிறது.
- க.ரவீந்திரன், ஈரோடு.