நம்பினால் நம்புங்கள்



நமது சருமத்தின் செல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டாலும், தழும்புகள் மட்டும் அப்படியே இருக்க என்ன காரணம்? அவற்றுக்கு அடியில் உள்ள கொலாஜன் மாறாமல் இருப்பதுதான்!

பிரவுனிஸ் மற்றும் ஓட்மீல் குக்கீஸ் போன்ற பேக்கரி பொருட்களைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தரும் 26 பக்க ஆவணத்தை அமெரிக்க ராணுவம் நடைமுறையில் வைத்திருக்கிறது!

முதல் உலகப் போரின்போது, எதிரி கப்பல்களில் உள்ள பெரிஸ்கோப்களில் எச்சமிடும் வகையில் ஸீகல் பறவைகளைப் பழக்க, இங்கிலாந்து ராணுவம் முயற்சி மேற்கொண்டது!
 
மைக்கேல் ஜாக்சனின் பிரேத பரிசோதனையின்போது, அவருக்கு வழுக்கைத்தலை என்பதும், அதை மறைக்க விக் அணிந்திருந்தார் என்பதும் தெரிய வந்தது.

இருமலுக்கு பல நேரங்களில் இருமல் மருந்தை விட, சாக்லெட் நல்ல பலன் தரும்!

அமெரிக்காவிலுள்ள மன்ஹாட்டன் பகுதியின் மக்கள்தொகை அடர்த்தி போல - அவ்வளவு நெருக்கமாக வாழ்வதானால், ஒட்டுமொத்த உலக மக்களையே நியூசிலாந்து நாட்டுக்குள் நிரப்பி விடலாம்!

அமெரிக்காவில் ஒவ்வொரு வினாடியும் சராசரியாக 45 கிலோ சாக்லெட் தின்னப்படுகிறது.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் ‘வாயு பிரிதலுக்குப் பெருமிதம் கொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் ஓர் அறிவியல் கட்டுரை எழுதியிருக்கிறார்!

லண்டனில் தரைக்கு அடியில் ட்யூப் ரயில் ஓடும் பாதையில், ஏறக்குறைய 5 லட்சம் எலிகள் வசிக்கின்றன!

நார்வேயின் முதல் விமானக் கடத்தல் சம்பவம், ஆயுதங்களுக்குப் பதிலாக கூடுதல் பியர் பானம் கொடுக்கப்பட்டு, தீர்க்கப்பட்டது!