நம்பினால் நம்புங்கள்



எவரெஸ்ட் உச்சியை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எட்டியிருக்கின்றனர். ஆழ்கடல் தரையைத் தொட்டவர்களோ இருவர் மட்டுமே!

விண்ணில் சுற்றும் தகவல்தொழில்நுட்ப செயற்கைக்கோள்களில் 40 சதவீதம் இங்கிலாந்தைச் சேர்ந்தவை.

10 சதவீத மக்களுக்கு கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் திறன் உள்ளது. அவர்களது வியர்வை வாசனையை 30 மீட்டர் தொலைவிலிருந்தும் கூட, கொசுக்களால் அறிய முடியும்!

1921ல், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள சில்வர்லேக் பகுதியில், ஒரே நாளில் பொழிந்த பனியின் அளவு 192.5 சென்டிமீட்டர்!

மனிதக் காதுகள் 130 டெசிபல் அளவு வரையிலுள்ள ஒலியை வலியின்றி கேட்கும்.

1920களிலேயே ‘கிரிஸ்டல் செட் ரேடியோ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மொபைல் போன் உருவாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது.

பிலிப்பைன் டார்சியர் என்கிற மிகச்சிறு பாலூட்டி அல்ட்ராசானிக் (செவியுணரா ஒலி) மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்கிறது.

சாக்லெட், ஐஸ்க்ரீம் போன்ற இனிப்பு கலந்த உணவுகளில் மனத்திண்மையை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

ரத்த ஓட்டம் பற்றி ஆராய்வதற்காக கண்ணாடியாலான இதயத்தை உருவாக்கினார் லியனார்டோ டா வின்சி.

சுத்தமான நீரை, அது உறைவதற்கு முன், மைனஸ் 48 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்க முடியும்.