ஆழ்கடல் வாகனம்!



படத்தில் இருப்பது ‘ரெமுஸ் 6000’ எனப் பெயரிடப்பட்ட மினி நீர்மூழ்கிக் கப்பல். இதற்குள் ஆட்கள் உட்கார்ந்து இயக்கத் தேவையில்லை. கடலில் மிதக்கும் ஒரு கப்பலில் இருந்தபடி இதை இயக்கலாம். கடலின் அடி ஆழத்துக்குச் சென்று, ஆழ்கடல் தரையில் இருக்கும் பொருட்களைத் தேடும் ஆற்றல் பெற்றது இது.

 கடந்த 2011ம் ஆண்டு ஏர் பிரான்ஸ் விமானம் அட்லான்டிக் கடலில் விழுந்து நொறுங்கியபோது, அதன் மிச்ச சொச்சங்களை இந்த நீர்மூழ்கிக் கப்பல்தான் தேடிக் கண்டுபிடித்தது. இப்போது மலேசிய விமானத்தைத் தேடும் பணியில் இது ஈடுபடுத்தப்பட்டுள்ளது.