ஹெல்த் மார்க்கெட்



வனிஷா சானிட்டரி நாப்கின்ஸ்

நோவோ ஹெல்த் அண்டு ஹைஜீன் நிறுவனத்தின் புதிய அறிமுகம் இது. சிறிதளவு கூட  கசிவில்லாத முழுமையான பாதுகாப்புக்காக 9 அடுக்குகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தும்போது,  நாள்  முழுக்க ஃப்ரெஷ்ஷாக உணரலாம்.

பேடின் வழியே காற்று உட்புகும் படி மென்மையான, ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட காட்டன் மேற்பரப்பு. சரும எரிச்சல்,  சரும அரிப்பு, தடிப்புகள் ஏற்படுவதும் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. இதனால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்!

ஏஜிங்கை எதிர்த்து நிற்கும் விஎல்சிசி டெர்ம்ஏஜ் சிகிச்சை!

முன்னணி  வெல்னஸ் பிராண்டான விஎல்சிசி, தளர்வுறும்  சருமத்தை மேம்படுத்தும் ‘டெர்ம்ஏஜ்’ என்ற சிகிச்சையை  அறிமுகம் செய்துள்ளது. பக்க விளைவு இல்லாதது. அனைத்து வகையான சருமத்துக்கும் ஒரே  சிட்டிங்கில் சிகிச்சை  அளிக்கக்கூடியது.

சமீபத்தில் சென்னையில் டெர்ம்ஏஜ் சிகிச்சையை அறிமுகப்படுத்தி பேசிய விஎல்சிசியின் நிர்வாக இயக்குநர் சந்தீப்   அகுஜா, `டெர்ம்ஏஜ் மிகவும் பாதுகாப்பான மற்றும் மருத்துவ ஆய்வுகளின் படி  நிரூபிக்கப்பட்ட ஆன்டி ஏஜிங் சிகிச்சை.  இது சருமத்தை புதுப்பித்து, உங்களை புத்துணர்வுடனும் இளமையாகவும்  காட்டும்...’’ என்றார்.

கார்த்திக் மருத்துவமனை குழந்தைகள் நல மையம், அண்ணா நகர், மதுரை.

குழந்தைகளுக்கு ஏற்படும் விதைப்பை பிரச்னைகளுக்கு இங்கு டாக்டர் குமார் வெங்கடேசன் விசேஷ சிகிச்சை அளிக்கிறார்.
சில குழந்தைகளுக்கு விதைப்பையில் இல்லாமல் வயிற்றுக்குள் விதைகள்  இருக்கும். இதை அலட்சியப்படுத்தினால்  விதைகள் அழுகி பயனற்று போய்விடும். ஒரு வயது ஆவதற்குள் அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.
குழந்தைகளுக்கு விதை வலி ஏற்படுவதும் ஆபத்தே.

விதைக்கொட்டைகள் முறுக்கேறி ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதாலேயே வலி ஏற்படுகிறது. வலி ஏற்பட்ட 6 மணி  நேரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்து சரி செய்துவிட வேண்டும்.  குழந்தைகளின் விதைப்பை வீக்கம், குடல் இறக்கம்  பிரச்னைகளுக்கும் இங்கு நவீன அறுவை சிகிச்சை செய்து சரி செய்யப்படுகின்றன.