இந்தியப்பெண்கள் 2 பேரில் 1 நபர் ரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்ஒரு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்ட  நிகழ்ச்சியிலிருந்து ஒரு வாடிக்கையாளர் சந்திப்பிற்கு விரைவது, பின் பலசரக்குக்கடை, ஒரு குடும்ப விருந்து என்று தற்காலப் பெண்கள் அனைவரும் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார்கள் நின்று நிதானமாக மூச்சு விட்டு, தன்னைப்பற்றி, முக்கியமாக தன் ஆரோக்கியத்தைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லாமல் இருக்கிறார்கள்.

இதனால் பெரும்பாலான பெண்கள் ரத்தசோகையினால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களின் ரத்த சோகையைப் பற்றி விளக்குகிறார்...மகளிர் நல மருத்துவர் கீதா ரங்கனாதன், ரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும், சோர்வு, தலைச் சுற்றல் மற்றும் தலைவலி போன்ற ரத்தச் சோகைக்கான பல்வேறு அறிகுறிகளுக்கு  அழுத்தமிக்க வாழ்க்கை முறைதான் காரணம் என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அது என்னவென்றே தெரியாமல், அது இயல்பானதுதான் என்று எடுத்துக்கொண்டு மிதமான ரத்தச் சோகையினால் பல வருடங்களுக்கு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
ரத்தச் சோகையானது  ஆரோக்கியமான ரத்தச் சிவப்பு அணுக்கள் அல்லது வளிப்பிணைப்பு ரத்தச் சிவப்பணு நிறப்பொருள்  (Hemoglobin)  ரத்தத்தில் குறைவாக இருப்பதால் உருவாகக் கூடியது. வளிப்பிணைப்பு சிவப்பணுக்கள்தான் பிராணவாயுவை ரத்த ஓட்டத்தில் இணைக்கும் ஆர்பிசி(RBC) யின் முக்கிய உட்கூறு. இந்த வளிப்பிணைப்பு சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய நமது உடலுக்கு இரும்புத்தாது தேவைப்படுகிறது.

ஒருவருக்கு ரத்தச் சிவப்பணுக்கள் எண்ணிக்கை குறைந்து அல்லது இயற்கைக்கு மாறாக இருந்தாலோ உடலில் அனைத்து பாகங்களிலுமுள்ள அணுக்களுக்கு போதுமான அளவு பிராணவாயு கிடைக்காது. நம்து உடல் பாகங்களுக்கு  தேவையான பிராணவாயு கிடைக்காத காரணத்தால்.பலகீனம்,சோர்வு, மூச்சுத்திணறல், கைகால்கள் குளிர்ந்து காணப்படுதல், இதயம் தாறுமாறாகத் துடிப்பது, நகங்கள் பிளவுவுறுதல், மற்றும் வெளிறிய தோல் ஆகிய ரத்தச் சோகைக்கான அறிகுறிகள் தோன்றும். இருப்பினும் இந்த மிதமான நிலை சரியான குறைநிரப்பு மருந்துகள் மற்றும் உணவுமுறையை மாற்றி அமைத்தல் ஆகியவற்றின் மூலம் சீர்படுத்தலாம்.  .

நாடு முழுவதிலுமிருந்து பெற்ற 2,18,200 மாதிரி தரவுகளை ஆய்வு செய்த போது இந்தியப் பெண்களிடையே மிகச் சாதாரணமாக நிலவும் மிக முக்கியமான ஆரோக்கிய குறைபாடு ரத்தச் சோகைதான் என்பது தெரிய வருகிறது. இதில் 50% க்கும் அதிகமான (1,08,845) பெண்களுக்கு ரத்தச் சோகையின் அறிகுறி காணப்பட்டது தவிர 90.4% பேருக்கு மிதமான ரத்தச் சோகையும், 9% பேருக்கு நடுதரமான ரத்தச் சோகையும், மற்றும்  0.6% பேருக்கு தீவிரமான் ரத்தச் சோகையும் இருப்பது சோதனைக்கூட ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

இரும்புச்சத்துக் குறைபாடு மற்றும் மகப்பேறு ஆகிய இரு முக்கிய காரணங்கள் ரத்தச் சோகையை உண்டு பண்ணுவதாக இருந்தாலும், நோயாளியின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் சில கடுமையான ரத்தச் சோகைகளுக்கு வேறு தீவிரமான வெளித்தெரியாத காரணங்கள் இருக்கக் கூடும். இவற்றில் நிரந்தர பாதிப்பை அளிக்கக் கூடிய  ரத்த அழிவு சோகை  (Beta Thalassemia) பெருஞ்செல்சோகை  (Macrocytic Anemia) மற்றும் பல நாட்பட்ட நோய்களும் அடக்கம்.  

வழக்கமாக செய்யப்படுகிற  ரத்தப் பரிசோதனைகளில் முழு ரத்த அணுக்கள் எண்ணிக்கை (CBC) பரிசோதனை நமக்கு ரத்தச் சிவப்பணு நிறப்பொருள்  (Hemoglobin) மற்றும் ரத்த சிகப்பு அணுக்கூறுகளின் நிலை பற்றி ஒரு ஒட்டுமொத்த  தகவலை அளித்துவிடும் என்றாலும் ஒரு முழுமையான பரிசோதனையை செய்வது ரத்தச் சோகைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய உதவும்.

மற்ற அறிகுறிகள் உள் ரத்தக்கசிவு, மற்றும் இரும்புச்சத்தை உள்ளிழுக்க  இயலாத நமது உடல் நிலை.போன்றவை.  காரணம் என்னவாக இருந்தாலும் நீண்டகால சிக்கல்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை நிலைமையை சீர்படுத்திக் கொள்ளவும் நம்மை விரைவில் பரிசோதித்துக் கொள்ளுவது மிக முக்கியம்    .
.
இந்த ஆய்வின்படி,18-45 வயது வரம்பிலுள்ள அதிகமான பெண்கள் தீவிரமான ரத்தச் சோகை உட்பட பல்வேறு வகையான ரத்தச் சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ரத்தச்சோகையினால் அதிகளவில் பாதிப்படையக் கூடியவர்கள் மகப்பேறு அடையக்கூடிய வயதை எட்டிய மகளிர், கர்பிணிப் பெண்கள், சத்துணவு உண்ணாதவர்கள், அடிக்கடி ரத்த தானம் கொடுப்பவர்கள், கைக் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள்,முக்கியமாக குறைமாதத்தில் பிறந்தவர்கள் அல்லது வளர்ச்சிக் குறைபாடுடையவர்கள் மற்றும் மாமிச உணவை ஈடு கட்டும் வகையில் வேறு இரும்புச்சத்து இல்லாத சைவ உணவு உண்பவர்கள்   

மேலும் மாதிரிகளில் 8.4% பீட்டா தலசீமியா என்ற தீவிரமான மரபுக் கோளாறால் ரத்தச் சோகை ஏற்பட்டிருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. அம்மாதிரியான நிலையில் தணிக்கைச் சோதனைகள் மிக அவசியமாகிறது. ஏனென்றால் இந்த நிலை பரம்பரையாகத் தொடருவது. பீட்டா தலசீமியா பாதிப்புள்ள குழந்தைகள் உயிர்வாழ சிரமப்படவும் மற்றும் வளர்ச்சி பாதிப்படையவும் கூடும். ஆகவே ரத்தச் சோகை அறிகுறையுள்ள அனைத்து பெண்களையும் ஒரு முழுமையான தணிக்கைச் சோதனையை மேற்கொண்டு  தொழில் ரீதியான மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறோம்    


கீழே பல வகையான ரத்தச் சோகைகள் பற்றி ஒர் வழிகாட்டி

 காரணம்:

1. ரத்த இழப்பு காரணமாக வரும் ரத்தச் சோகை

2. குறைந்த அல்லது தவறான ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியினால் வரும் ரத்தச் சோகை

3. மற்ற உடல் நிலை காரணங்களால் வரும் ரத்தச் சோகை       
   
4. ரத்தச் சிகப்பணுக்கள் அழிக்கப்படுவதால் வரும் ரத்தச் சோகை

வகை:

1.வயிறு,குடல் சம்பந்தப்பட்ட புண்கள்,புண்கள், மூலம், இரைப்பை அழற்ச்சி(அழற்ச்சி(வயிற்றுத் திசுக்கள் பாதிப்பு) புற்றுநோய் மற்றும் பெண்களிடையே மாதவிடாய் மற்றும் குழந்தைப் பிறப்பு

2. அரிவாளணு ரத்தசோகை,(sickle cell Anemia)   இரும்புச்சத்து குறைபாடு ரத்தச் சோகை உயிர்ச்சத்துக்(Vitamin)குறைபாடு, எலும்பு மஜ்ஜை மற்றும் முதல் நிலை உயிரணு(Bone marrow and stem cell) பிரச்சினைகள்

3. முற்றிய தீவிர சிறுநீரக நோய், தைராய்டு சுரப்புக் குறை, மற்ற நீண்டகால நோய்களான புற்றுநோய், தொற்று, தோல் முடிச்சு நோய் (lupus,) நீரிழிவு, மற்றும் மூட்டழற்சி நோய்கள்.

4. பரம்பரை நோய்களான அரிவாளணு ரத்தசோகை, தலசீமியா, தீவிர கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் காரணமாக நச்சு பாதிப்பு, முறையற்ற நோய் எதிர்ப்பு மண்டலத்தின் (கர்ப்பிணியின் கருப்பையிலுள்ள கருவை பாதிக்கும் பிறவி சிகப்பணு அழிவுச்சோகை நோய் என்றறியப்படுகிற) முறையற்ற எதிப்புச் செயல்பாடு, ரத்த நாள் திசு ஒட்டு, செயற்கை இதய தடுக்கிதழ் (valves) கட்டிகள், தீவிர தீப்புண், சில இரசாயன பொருட்கள் பாதிப்பு, தீவிர ரத்தக்கொதிப்பு மற்றும் ரத்தம் உறைதல் குறைபாடு ஆகியவை.