பெருநகர மக்களை வாட்டும் வைட்டமின் ‘‘டி’’ வைட்டமின் குறைபாடு



அதிகாலையில் எழுந்த குறைந்தது அரை மணிநேரமாவது உடற்பயிற்சி செய்வதை விருப்பமாக இல்லாமல் நிர்பந்தமாகவே நினைக்கிறார்கள் இந்தியர்கள்.

நீங்கள் எந்த ஒரு தகுந்த காரணமும் இன்றி தொடர்ந்த உடல் வலி மற்றும் எப்பொழுதும் சோர்வாக இருப்பது போன்று உணருகிறீர்களா? அப்ப’டி’யென்றால், உங்கள் உடல் குறிப்பிடத்தகுந்த அளவு வைட்டமின் ‘‘டி’’ குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

சென்னையில் 0 முதல் 80 வயதுவரை உள்ள 1 லட்சத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகளின் தரவுகளை ஆய்வு செய்து கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சி வைட்டமின் ‘‘டி’’ பிரச்சினையின் அதிர்ச்சியூட்டும் அளவை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

சோதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் (60%) வைட்டமின் குறைபாடு அறிகுறிகளை வெளிப்படுத்தினர். மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதம் பேருக்கு குறைபாடு இருப்பதாக அறிவிக்கப்பட்’டி’ருந்தாலும். அரிதாக 1% பேர் உயிர்ச்சத்து மிகைப்பு (ஹைப்பர் விட்டமினோஸிஸ்) நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

16% நபர்கள் மட்டுமே போதுமான அளவில் வைட்டமின் ‘‘டி’’ சத்தை கொண்’டி’ருந்தனர். இருப்பினும் அதிர்ச்சியளிக்கக் கூ’டி’ய விதமாக இந்த பிரிவில் 10 லிருந்து 20 வயதுடைய இளம் பருவத்தினரின் எண்ணிக்கை மிகக் குறைந்து காணப்பட்டது. வைட்டமின் ‘‘டி’’ யின் அவசியத்தை விளக்குகிறார் மருத்துவர் அனிதா சூரியநாராயண்....

“சூரியஒளி வைட்டமின்” (சன்ஷைன் வைட்டமின்) என்ற புகழைப்பெற்ற வைட்டமின் ‘டி’ சத்து சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தப்படும் உடல் தோல்பரப்பின் எதிர்வினையால் தயாரிக்கப்படுகிறது.இயற்கையில் இது மிக அபூர்வமாக நிகழ்கிறது. மற்றப’டி’ மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆன உணவுகள் மட்டுமே வைட்டமின் ‘டி’ யின் முக்கிய மூலாதாரமாக கருதப்படுகிறது.

கொழுப்பில் கரையக்கூ’டி’ய தன்மையைக் கொண்டுள்ள வைட்டமின் ஆதலால் அது உடலின் திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டு நமது உணவிலுள்ள கால்சியத்தை பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. வைட்டமின் ‘டி’ குறைபாடு, அல்லது போதிய அளவு இல்ல்லாதிருப்பது எலும்புச் சுண்ணாம்புப் ப’டி’வம் அடைவதற்கு இட்டுச் சென்று எலும்புகள் வலுவிழக்கும் நோய் உண்டாக காரணமாகிவிடும்.

உதாரணமாக குழந்தைகள் மத்தியில் என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) பொதுவாக காணப்படுவதற்கு தீவிர குறைபாடு காரணமாகவும் மற்றும் வயதானோருக்கு ஏற்படும் எலும்பு நலிவு(ஆஸ்’டி’யோமலாசியா) மற்றும் எலும்புப்புரை(ஆஸ்’டி’யோபோரோஸிஸ்) ஆகிய நிலைகள் முக்கிய காரணமாகவும் விளங்குகின்றது.

இந்த ஊட்டச்சத்து இயற்கையாகவே பெருமளவு கிடைக்கப்பெறும். நிலையிலுள்ள மக்கள் மத்தியில் அதிகமானோர் இதன் குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பது கண்டு ஆச்சரியப்படுவது மிக சுலபமே. இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிலும் சமீப காலத்தில் ஏற்றம் கண்டுள்ள வைட்டமின் ‘டி’ சத்துக் குறைபாடுக்கு காரணமாக உடலுழைப்புக்குறைவு மற்றும் மூ’டி’ய அறைக்குள் பணிகளை மேற்கொள்ளும் வாழ்க்கை முறை ஆகியவற்றை சுட்’டி’க்காட்டலாம்.

மக்கள் தொகையில் பெரும்பாலானோர் அறைக்குள் மேசைகளில் உட்கார்ந்து பணி செய்வது அவர்களின் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சூரிய ஒளிக்கு உடல் வெளிப்படுத்தப்படுவதையும் தவிர்க்கிறது. தற்காலக் குழந்தைகள் காலையிலிருந்து மாலை வரை பந்தை உதைத்து வியர்வை சொட்டச் சொட்ட விளையாடுவதை கைவிட்டு கணினியில் எணணியல் விளையாட்டுக்களை விளையாடத்தொடங்கி விட்டனர். கலப்பட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகளவில் உட்கொள்ளுவதும் நமது உடலை வலுவிழக்கச் செய்கிறது. மேலும் அதுவே வைட்டமின் ‘டி’ சத்து சேர்க்கையை குறைவடையச் செய்கிறது.

இந்தக் குறைபாட்டை அடையாளம் கண்டு ஆரோக்கியக்கேட்டை தவிர்ப்பதற்கு முக்கியமான சவால்களாக திகழ்வது பெரும்பான்மை மக்கள் தாங்கள் இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்’டி’ருப்பது குறித்து எந்த வித விழிப்புணர்ச்சியும் இன்றி இருப்பதுதான். மக்கள் வெகு சுலபமாக அதன் அறிகுறிகளான களைப்பு மற்றும் உடல்வலி ஆகியவற்றுக்கு மனஅழுத்தம்தான் காரணம் என்று புறக்கணித்து விடுகிறார்கள்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகளில் சூரிய ஒளிக்கு 30 நிமிடங்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொண்டாலும் உடலுக்குத் தேவையான அளவு வைட்டமின் ‘டி’ சத்து கிடைப்பதில்லை என்று கண்டுபி’டி’க்கப்பட்டுள்ளது. இதற்கு விடையளிக்கும் மற்றும் ஒரு கோட்பாடாக கருதப்படுவது என்னவென்றால் நமது இனம் சார்ந்த கருமை நிறமும் அதன் காரணமாகவே அதிகளவில் பயன்படுத்தப்படும் சூரியக்கதிர்களை தடுக்கும் பொருட்களும்அ’டி’ப்படைக் காரணங்கள் எதுவாக இருந்தாலும் வைட்டமின் ‘டி’ ஊட்டச்சத்து ஏற்றம் பெற்ற துணை உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுவதன் தேவை தெளிவாகத் தெரிகிறது.

வைட்டமின் ‘டி’ சத்தை அதிகமாக தன்னுள் கொண்ட சில உணவு வகைகளாவன மீன், மாட்டு ஈரல், முட்டை மஞ்சள் கரு, ஆகியவை. இது தவிர சைவ உணவு உட்கொள்ளுபவர்கள் பாதாம் பால், சேயாபால், ஆரஞ்சுப் பழச்சாறு, நவதானியங்கள், மற்றும் காளான் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நவீன நகர வாழ்க்கை முறை சரியான உணவுகளை உட்கொள்ள நம்மை அனுமதிப்பதில்லை. அல்லது வைட்டமின் ‘டி’ சத்தை உருவாக்க தேவையான சூரிய ஒளியை பெறுவதற்கு நமக்கு நேரத்தை அளிக்காது ஆகவே , விட்டமின் ‘டி’ குறைபாடு அல்லது அளவு குறைந்திருக்கிறதா என்று .சோதனை செய்து கொண்டு அந்த நிலையை சீர்படுத்த மருத்துவ உதவியை நாடுவது மிக முக்கியமான ஒன்றாகும்.