டியர் டாக்டர்




4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அறிவிப்பைக் கண்டு, பூரித்துப் போனோம். கடந்த 3 ஆண்டுகளில் குங்குமம் டாக்டரில் வெளிவந்த மருத்துவ கட்டுரைகள், விளக்கங்கள் யாவும் பொக்கிஷம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள்!
- சிம்ம வாஹினி, வியாசர் காலனி.

இன்றைய சமுதாயம் சந்தித்து வரும் மிகப் பெரிய சமூகப் பிரச்னையை நன்கு அலசி ஆராய்ந்திருந்தது ‘அழியும் உயிரினமாகிறதா மனித இனம்?’ என்ற கவர் ஸ்டோரி. டாக்டர் ஹகாய் லெவின் விடுத்து இருக்கும் எச்சரிக்கையை சிறிதும் அலட்சியப்படுத்திடாது தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்க வேண்டும்.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

`பழங்கள் பலவிதம்’ கட்டுரை ஆச்சரியம் ப்ளஸ் ஆனந்தம்! மிகவும் பயன் உள்ள கட்டுரை. அதேபோல், மகிழ்ச்சியற்றவர்களின் மோசமான 10 பழக்கங்கள் படித்து, அந்தப் பழக்கங்களில் எது எது என்னிடம் இருக்கிறது என்று சுய பரிசோதனையும் செய்துகொண்டேன். சமூகத்தில் நம்மைச்சுற்றியுள்ள மக்களின் முகங்களை எடுத்துக்காட்டுவதாயும் கட்டுரை அமைந்திருந்தது.
- இல.வள்ளிமயில், திருநகர்.

ஆளைக் கொல்லும் ‘ப்ளுவேல் பயங்கரம்’ படித்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற கொடூர விளையாட்டுகளுக்கு இளைய தலைமுறையினர் பலியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. முக்கியமாக, பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களின் மொபைல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டியது கட்டாயம்!
- சி.கோபாலகிருஷ்ணன், மேற்கு தாம்பரம்.