டியர் டாக்டர்




எனது 25 வயது மகள் வெண்புள்ளிகளால் அவதிப்பட்டு வருகிறாள். பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகவில்லை. கடும் மன உளைச்சலில் இருந்த எங்களுக்கு, கடந்த இதழில் வெளியான ‘வெண்புள்ளிகள் விழிப்புணர்வு’ கட்டுரை மன மகிழ்வைத் தந்தது. இந்த வெண்புள்ளிகள் பற்றிய கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். உதவுவீர்களா?!
- சேதுராமன், திருநெல்வேலி.
அன்புள்ள சேதுராமன் அவர்களுக்கு...

தங்களின் கடிதத்தில் தெளிவான முகவரியோ, தொலைபேசி எண்ணோ இல்லாததால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகுதிவாய்ந்த சரும நல மருத்துவர் ஒருவரை உடனடியாக அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம். வெண்புள்ளி களுக்கு எத்தனையோ நவீன சிகிச்சைகள் வந்திருப்பதால் தாங்கள் கவலை அடைய வேண்டியதில்லை. சென்னையில் இதற்கென தனி இயக்கமும் செயல்பட்டு வருகிறது. அவர்களது தொலைபேசி எண் இது: 044 - 2226 5507/08.

வாசகர்கள் தங்கள் கடிதத்தில் தொலைபேசி எண்ணை மறக்காமல் குறிப்பிடும்படியும், அவசரத் தகவல்களுக்கு குங்குமம் டாக்டர் ஆசிரியர் குழுவினரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறோம்!
- ஆசிரியர்

மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளை பற்றிய கவர் ஸ்டோரியில் பூனைக்கு மணி கட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள். தனிப்பட்ட மருத்துவரையோ, மருத்துவமனையையோ குற்றம் சாட்டாமல் மருத்துவம் என்ற அமைப்பு இந்தியாவில் ஏன் இத்தனை காஸ்ட்லி யாக இருக்கிறது என்று அலசி இருந்தது பாராட்டத்தக்கது.
- சி.கோபாலகிருஷ்ணன், தாம்பரம்.

குழந்தையின் மீதான அதீத அக்கறை, அவர்களின் எதிர்காலத்துக்கே பெரும் சிக்கலாக மாறுவது பற்றி விளக்கியிருந்தது
‘மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்’ கட்டுரை.
- தமிழ்ச்செல்வன், செம்பாக்கம்.

டயாபடீஸ் மேக் இட் சிம்பிள் பகுதியில் பக்கவாதத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மிக எளிமையாக விளக்கி, சரியாக எச்சரித்திருந்தார்  கட்டுரையாளர் கே.சுவாமிநாதன். அறிகுறிகள், பாதிப்புக்கு ஆளாகிவிட்ட நோயாளிகளை அவசர கதியில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டிய அவசியம் பற்றி ஏ டூ இஸட் விளக்கி இருந்தது பயனுடையதாக இருந்தது.
- இரா.வளையாபதி, தோட்டகுறிச்சி.

ஹெல்த்தியான ABC- ஜூஸ் கட்டுரை முற்றிலும் புதுமையானதாக இருந்தது. ஆப்பிள், கேரட், பீட்ரூட் மூன்றும் கலந்த ஒரு ஜூஸ் என்பது பற்றி படிக்கும்போதே சுவாரஸ்யமாகவும் இருந்தது.
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி.