அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?* மொழி

Spot the Error-1

Had been vs had gone !!!!!

அகிலாவை அழைத்த ரகு ‘‘ (I asked Ravi to meet me yesterday evening. He didn’t. What happened to him?) ரவியை நேத்து சாயந்திரம் என்னை வந்து பார்க்கச் சொன்னேனே? வரவே இல்ல… என்ன ஆச்சு அவனுக்கு?” என்று கேட்டார். “(He had gone to head office. So he did not meet you, I suppose) நேற்று மாலை அவன் தலைமை அலுவலகத்திற்கு போயிருந்தான் சார். ஒருவேளை அதனால உங்களை சந்திக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்” என்றாள் அகிலா. (It’s okey Akila. It seems, still he has not returned) ‘‘அது சரி அகிலா. இன்னும் திரும்பல போல இருக்கு?” என்றார் ரகு.

(No sir. He has returned. Now he is in despatch section) ‘‘இல்லைங்க சார். அவரு திரும்பிட்டாரு. இப்ப டெஸ்பேட்ச் செக்‌ஷன்ல இருக்காரு” என்றாள் அகிலா.  ‘‘அப்படின்னா ‘ஹி ஹேட் பீன்’ என்றுதான் நீ சொல்ல வேண்டும். ஹி ஹேட் கான்” என்று சொல்லக் கூடாது” என்றவரை சற்றே குழப்பத்துடன் பார்த்தாள் அகிலா. He had gone என்றால் ‘‘சென்றிருந்தான். இன்னும் அங்கேயே இருக்கிறான்” என்று அர்த்தம். அதே சமயம், He had been என்றால் “சென்றிருந்தான். திரும்பியும் வந்து விட்டான்” என்று அர்த்தம். He had been என்பதற்கு visited என்று அர்த்தம்.

அவன் சென்னைக்குச் சென்றிருக்கிறான் - தற்சமயம் இங்கு இல்லை. அநேகமாய் சென்னையில் இருக்கலாம் அல்லது சென்னையிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் He has gone to Chennai எனச் சொல்ல வேண்டும். ‘‘மாறாக ‘அவன் சென்னைக்கு பல முறை சென்று வந்திருக்கிறான்’ என்ற கருத்தில் சொல்ல வேண்டும் என்றால் He has been to Chennai என்று சொல்ல வேண்டும்’’ என்று விவரித்துக்கொண்டிருந்தார் ரகு.

அதே சமயம் அங்கு வந்த ரவி, ‘‘Sorry sir. I had been to head office yesterday evening and was heldup till late night. Since my phone was out of order, I was unable to convey my absence sir” என்றான். சற்றே ஆச்சரியப்பட்டாள் அகிலா, ‘‘ Not a wonder sir ! Ravi deserves to be your disciple sir! As well, I have a doubt sir. ‘The teacher as well as the student were happy’ Is this sentence correct sir?” enquired Akila.

(மீண்டும் பேசலாம்)
ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com
சேலம் ப.சுந்தர்ராஜ்