வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

துணை ராணுவப்படையில் மருத்துவ அதிகாரி பணி!

நிறுவனம்: இந்திய ராணுவத்தின் துணை ராணுவப்படையான இந்தோ திபேத்திய எல்லைப்படை (ஐ.டி.பி.பி)
வேலை: மெடிக்கல் ஆபீசர் (மருத்துவ அதிகாரி)
காலியிடங்கள்: மொத்தம் 496. இதில் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் 4, ஸ்பெஷலிஸ்ட் மெடிக்கல் ஆபீசர் 175 மற்றும் மெடிக்கல் ஆபீசர் 317 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ் வயது வரம்பு: முதல் வேலைக்கு 50க்குள்ளும் இரண்டாம் வேலைக்கு 40-க்குள்ளும் மூன்றாம் வேலைக்கு 30-க்குள்ளும் இருத்தல் அவசியம்
தேர்வு முறை: நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.5.19  
மேலதிக தகவல்களுக்கு: www.itbpolice.nic.in


பட்டதாரிகளுக்கு மத்திய ஆயுதப்படையில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் ஃபோர்ஸ் எனும் மத்திய ஆயுத போலீஸ் படைக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது
வேலை: உதவி கமாண்டண்ட் பதவியில் பல்வேறு ஆயுதப்படைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 327. இதில் பி.எஸ்.எஃப் 100, சி.ஆர்.பி.எஃப் 108, சி.ஐ.எஸ்.எஃப் 28, ஐ.டி.பி.பி 21 மற்றும் எஸ்.எஸ்.பி 60 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு: 20 முதல் 25 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, உடல்திறன், மருத்துவ சோதனை
உடல் தகுதி: ஆண்களின் உயரம் 165செ.மீ, பெண்களின் உயரம் 157 செ.மீ., எடை ஆண்களுக்கு 50 கிலோ, பெண்களுக்கு 46 கிலோ. இயல்புநிலையைவிட மார்பளவு ஆண்களுக்கு 5 செ.மீ அதிகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.5.19
மேலதிக தகவல்களுக்கு: www.upsc.gov.in  

மத்திய அரசில் மல்டிடாஸ்க்கிங் வேலை!

நிறுவனம்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷனின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: எம்.சி.எஸ் எனப்படும் மல்டிடாஸ்க்கிங் ஸ்டாஃப். இது நான் டெக்னிக்கல் வேலை
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: 10வது தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.5.19
மேலதிக தகவல்களுக்கு: www.ssc.nic.in

ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலை  

நிறுவனம்: தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் எனும் கேரள மாநிலம் திருவாங்கூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான உரம் மற்றும் வேதியல் நிறுவனம்
வேலை: சீனியர் மேனேஜர், கம்பெனி செக்ரட்டரி, டெக்னீஷியன், ஸ்டெனோ உட்பட 21 துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 274
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பி.எஸ்சி, டிகிரி, எம்.பி.பி.எஸ், சி.ஏ, எஞ்சினியரிங் போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சிபெற்றிருந்தால் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 26 முதல் 48 வரை
தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.5.19
மேலதிக தகவல்களுக்கு: www.fact.co.in

இந்திய ராணுவத்தில் படைவீரர் பணி!

நிறுவனம்: இண்டியன் ஆர்மி
வேலை: சோல்ஜர்(படைவீரர்) பதவியில் 5 துறைகளில் வேலை
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை. சோல்ஜர் ஜெனரல் ட்யூட்டி, சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர் டெக்னிக்கல் மற்றும் சோல்ஜர் டிரேட்ஸ்மேன் எனும் 5 பிரிவுகளில் வேலைகள் உண்டு
கல்வித் தகுதி: முதல் பிரிவுக்கு 10வது படிப்பும், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பிரிவுகளுக்கு +2 படிப்பும் கடைசிப் பிரிவுக்கு 10வது படிப்பு அல்லது ஐ.டி.ஐ படிப்பில் தேர்ச்சி வேண்டும்
வயது வரம்பு: முதல் பிரிவுக்கு 17 முதல் 21 வரையும், மற்ற வேலைகளுக்கு 17 முதல் 23 வயது வரையும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.5.19
மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் சீனியர் ரெசிடெண்ட் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ராய்ப்பூர் கிளை
வேலை: சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 104. பல்வேறு மருத்துவத் துறைகளில் இந்த வேலைகள் உண்டு
கல்வித் தகுதி: குறிப்பிட்ட மருத்துவத் துறையில் பி.ஜி மருத்துவப் படிப்பு
வயது வரம்பு: அசிஸ்டெண்ட் மற்றும் அசோசியேட் ப்ரொஃபசர் வேலைக்கு 50க்குள்ளும், அடிஷனல் ப்ரொஃபசர் வேலைக்கு 58க்குள்ளும் இருத்தல் அவசியம்
தேர்வு முறை: கல்வித் தேர்ச்சி மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.5.19
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsraipur.edu.in

 தொகுப்பு: டி.ரஞ்சித்