ஆடை உற்பத்தி, ஃபேஷன் டிசைன் படிக்க விண்ணப்பிக்கலாம்!



* அட்மிஷன்

ஆடை உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில் முனைவு துறைகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில்முறை பயிற்சிகளையும், படிப்புகளையும்  வழங்கிட Apparel Training & Design Center (ATDC) கல்வி நிறுவனம் மத்திய ஜவுளி அமைச்சகத்தால் 1996ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

நாட்டின் 23 மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் அமைத்து, ஆடை உற்பத்தி சார்ந்த தொழில்முறை பயிற்சிகளையும், படிப்புகளையும் தொடர்ந்து 25 ஆண்டுகளாக சர்வதேச தரத்தில் வழங்கிவருகிறது இக்கல்விநிறுவனம். குறுகிய கால சான்றிதழ் படிப்புகளில் தொடங்கி மூன்று வருட கால பட்டப்படிப்புகள் வரை இக்கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. தொழில் பயிற்சியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் இக்கல்விநிறுவனத்தில் 2019-20 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

ATDC கல்விநிறுவனமும் Rajiv Gandhi National Institiute of Youth Development (RGNIYD) கல்விநிறுவனமும் இணைந்து வழங்கும் மூன்று வருட பட்டப்படிப்பான B.Voc. in Apparel Manufacturing & Entrepreneurship மற்றும் B.Voc. in Fashion Design & Retail ஆகிய படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தபடவிருக்கிறது.

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் படித்து +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர் ஆவர். அரசு விதிகளின்படி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அனுசரிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.atdcindia.co.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். பொதுப் பிரிவினர் ரூ.200, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி ‘ATDC-CHENNAI, 18-23, 2nd Floor, Ready Made Garment Complex, Thiru vi.ka. Industrial Estate, Guindy, Chennai-
32’ என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 8.6.2019.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

+2வில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் ஸ்கிரீன் டெஸ்ட், ஸ்கைப் இன்டர்வியூ ஆகியவற்றின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
மேலும் முழுமையான விவரங்களை அறிய www.atdcindia.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.   

-துருவா