உதவித்தொகையுடன் முனைவர் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்!



* ஸ்காலர்ஷிப்

இந்தியாவின் வரலாறு, நாகரிகம், கலாசாரம், சமூகம் மற்றும் தத்துவவியல் போன்ற துறைகளில் முனைவர் ஆய்வை மேற்கொள்ள விரும்பும் இந்திய மற்றும் ஆசிய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் (JNMF). ஒவ்வொரு ஆண்டும் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டுவருகிறது. அதன்படி 2019ம் ஆண்டு ஸ்காலர்ஷிப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவித்தொகை வழங்கும் துறைகள்

விண்ணப்பிக்க விரும்புவோர் Indian History and Civilization, Sociology, Comparative Studies in Religion & Culture, Economics, Geography, Philosophy, Ecology & Environment போன்ற ஏழு வகையான துறைகளில் ஏதேனும் ஒன்றில் முழுநேர ஆய்வுப் படிப்பை மேற்கொள்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் தங்கள் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் 60% மதிப்பெண்களுடன் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேற்கூறிய துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்திருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
 
உதவித்தொகை

டியூஷன் ஃபீஸ் மற்றும் மெயின்டனென்ஸ் என மாதம் ரூ.18 ஆயிரம், ஸ்டடி மெட்டீரியல் மற்றும் கல்விச் சுற்றுலாவிற்கு வருடம் ரூ.15 ஆயிரம் என இரண்டு வருடங்கள் உதவித்தொகை வழங்கப்படவிருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.jnmf.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்யவேண்டும். பூர்த்தி செய்த படிவத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி ‘Admisnistrative Secretary, Jawaharlal Nehru Memorial Fund, Teen Murti House, New Delhi- 110011’ என்ற முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.5.2019.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jnmf.in என்ற இணையதளப்பக்கத்தைப் பார்க்கவும்.

- வெங்கட்