IAS தேர்வை தமிழில் எழுதி வெற்றி பெறலாம்!



* பயிற்சி

‘‘தற்போது பணிபுரிந்து வரும் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், சேவை மனப்பான்மையுடனும் செயல்படுவதாக கேள்விப்படுகிறேன். அவர்கள் அனைவரும் இந்தியாவின் அடிப்படை வசதி இல்லாத கிராமங்களிலிருந்தும், மிகவும் பின்தங்கிய பொருளாதார நிலை உள்ள குடும்பங்களிலிருந்தும் வருகின்றனர் என்பதையும் அறிகிறேன். இவர்களை போன்று எளிய பின்னணி உள்ள இளைஞர்களுக்கு தரமான பயிற்சி அளித்து, வழிகாட்டி, சிவில் தேர்வுகளுக்கு தயார் செய்து வரும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் செயல்பாடுகள் பாராட்டப்படவேண்டியது.

எளிய பின்னணியிலிருந்து வருவதால்தான் அவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நோக்கம் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்” இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொன்னார். அவர் அப்படி பாராட்டுவதற்கு காரணங்களாக அமைந்த சிறப்பம்சங்களை கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் பயிற்சி மைய நிறுவனர் சத்ய ஸ்ரீபூமிநாதன் பகிர்ந்துகொண்டார்.

‘‘சிவில் சர்வீஸ் அதிகாரிகளால் தான் ஒரு மாணவனுக்கு தரமான ஐஏஎஸ் பயிற்சி அளிக்க முடியும் என்று உணர்ந்து, தற்போது பணியில் உள்ள மற்றும் முன்னாள் ஐஏஎஸ், ஐஆர்எஸ், ஐஆர்ஏஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி. இம்மையத்தில் பயிற்சியும் அவர்களே வழங்குகிறார்கள். விவேக் ஹரிநரேன் ஐ.ஏ.எஸ், அஜித்குமார் ஐ.ஏ.எஸ், சிவசைலம் ஐ.ஏ.எஸ், பாலசந்தர் ஐ.ஏ.எஸ், கே.லட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ், ஆர்.சேகர் ஐ.ஆர்.எஸ், கே.பி.சிங் ஐ.ஆர்.எஸ், சுவாமிநாதன் ஐ.ஆர்.எஸ்,வி.நந்தகுமார் ஐ.ஆர்.எஸ், போன்றவர்களின் வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு கிடைக்கிறது.

2018-19 ஆண்டிற்கான சிறந்த சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையம் என்ற விருதும் பெற்றுள்ளது இந்நிறுவனம். மேலும் 2018ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கிங்மேக்கர்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற சுமார் ஐம்பது மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக அளவில் முதலிடம் பெற்ற C.A ரிஷப், இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

 2018- 19 ஆண்டில் நடந்த சிவில் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்ற 35 மாணவர்களில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற  21 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 23 வது இடமும் பெற்ற சி.எ. ரிசப், இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவரே. மேலும் இந்திய அளவில் 75 வது இடம் பிடித்த மல்லரப்பு நவீன், தீபநவிஸ்வேஸ்வரி (117), ராஜ்குமார் (263), சித்ரா (296), தமிழ் ஓவியா (345), அபிஷேக் ஒஸ்வல் (369), வீரபள்ளி வித்யாதர் (383), தருண்குமார் (413), அஷோக் குமார் (438), பிரத்விராஜ்(481), கிஜி பிரியங்கா (485), கோவிந்தரஜ் (521), பொன்மணி (540), நித்யா ராதாகிருஷ்ணன் (543), வர்ஷா சஹாலொத்ரி (574), ஹரி பிரசாந்த் ( 568), தளபதி ராம்குமார் (620) ஆகியோரும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்களாவர்.

வெறும் வணிகம் சார்ந்த பயிற்சி மையமாக செயல்படாமல், தரமான பயிற்சியை சேவை மனப்பான்மையுடன் வழங்குவதே கடமையென கொண்டுள்ளது இப்பயிற்சி மையம்.’’ என்கிறார் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் சிறப்பம்சங்கள் குறித்து கூறும்போது, ‘‘திறன் மிகுந்த மாணவர்களை உத்வேகப்படுத்தும் பொருட்டு 100% ஸ்காலர்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி. பொதுஅறிவு தேர்வு மற்றும் திறனாய்வு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்காலர்ஷி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்காலர்ஷிப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முழு பயிற்சியும் இலவசமாக அளிக்கப்படும்.

பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பதினெட்டு மாத அளவிலான UPSC INTENSIVE PROGRAME, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், படித்துக்கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் UPSC INTEGRATED PROGRAME, ஆன்லைன் மற்றும் குறுகியகால பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படுகின்றன.’’ என்கிறார் பூமிநாதன்.

மேலும் அவர் தொழில்நுட்ப ரீதியாகவும் பயிற்சிகளை வழங்குவது குறித்து விவரித்தார். ‘‘ஹைடெக் கிளாஸ் ரூம், தரமான உட்கட்டமைப்பு வசதி என சிறப்பான சூழலில் தரமான ஐஏஎஸ் பயிற்சி வழங்கபட்டுவருகிறது. மேலும் சேவை மனப்பான்மையுடன் கூடிய அனுபவமிக்க ஐஏஎஸ் அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்படுவது என்பது கூடுதல் சிறப்பு. தேர்வுகளுக்கு தேவையான அப்டேட்டட் ஸ்டடி மெட்டீரியல்கள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் அனைவரும் பயன்படுத்தும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி செல்போன் செயலி (App) ஆகியன மாணவர்கள் எளிமையாக தேர்வை எதிர்கொள்ள வழிவகை செய்கின்றன.

நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் செல்போன் செயலியில் (App) பதிவேற்றுதல், தினமும் 20 வகையான அப்ஜெக்டிவ் டைப் கேள்விகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்காக ஒவ்வொரு வாரமும் தனியாக நேரம் ஒதுக்குதல் என  நடப்பு நிகழ்வுகளுக்கென பிரத்யேக செயல்பாடுகளோடு தேர்வை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துகிறது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழியில் ஸ்டடி மெட்டீரியல் வடிவமைத்து மாணவர்களை தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற செய்து முன்னோடியாக செயல்படுகிறது கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’’ என்கிறார் சத்ய ஸ்ரீபூமிநாதன்.