NITIE-ல் இண்டஸ்டிரியல் எஞ்சினியரிங் படிக்க விண்ணப்பிக்கலாம்!



அட்மிஷன்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பட்டில் தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவருகிறது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப்  இண்டஸ்டிரியல் எஞ்சினியரிங் (NITIE) கல்வி நிறுவனம். இது 1963ம் ஆண்டு மும்பையில் நிறுவப்பட்டது. இந்தியாவின் தலைசிறந்த கல்வி  நிறுவனங்களுள் இதுவும் ஒன்று.



இக்கல்வி நிறுவனம் சர்வதேச தரத்திலான எஞ்சினிரிங் மற்றும் நிர்வாகம் சார்ந்த பல்வேறு முதுகலை டிப்ளோமா படிப்புகளையும் மற்றும் முனைவர்  படிப்புகளையும் கடந்த ஐம்பது வருடங்களாக வழங்கிவருகிறது. 2019-2021ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை டிப்ளமா மற்றும் உதவித்தொகையுடன்  கூடிய முனைவர் படிப்பிற்கான மாணவ சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
வழங்கப்படும் படிப்புகள்

இரண்டு வருடகால அளவிலான முதுகலை டிப்ளோமா படிப்புகளான Post Graduate Diploma in Industrial Engineering  (PGDIE), Post Graduate Diploma in Manufacturing Management (PGDMM), Post Graduate Diploma in  Project Management (PGDPM) மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது. மேலும் முனைவர் பட்டத்திற்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.  

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து 60% மதிப்பெண்களுடன் Engineering அல்லது Technology துறைகளில் பட்டம்  பெற்றவர்கள் முதுகலை டிப்ளமா படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். Management, Economics, Commerce, Social science,  Life science and Pure science அல்லது Engineering / Technologyபோன்ற துறைகளில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப்  பட்டம் பெற்றவர்கள் முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. மேலும் கடைசி ஆண்டு படித்துவரும் மாணவர்களும்  விண்ணப்பிக்கலாம். எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ஊக்கத்தொகை

GATE / NET - JRF நுழைவுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே ஊக்கத்தொகை  வழங்கப்படுகிறது.  தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சுமார் ஐந்துவருடம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் முதுகலை மற்றும் GATE /NET - JRF நுழைவுத்தேர்வுகளில்  எடுத்த மதிப்பெண்கள், கல்வி நிறுவனம் நடத்தும் எழுத்துத்  தேர்வு, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத்தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nitie.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவு  மாணவர்கள் ரூ.1000 மற்றும் எஸ்.சி / எஸ்.டி மாணவர்கள் ரூ.500 ஐ செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்  1.4.2019. மேலும் முழுமையான விவரங்களை அறிய www.nitie.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா