வேலைவாய்ப்பு பெற என்ன படிக்கலாம்?



வழிகாட்டல்

நம் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பத்தாம் வகுப்பு முடித்ததுமே 12ம் வகுப்பில் எந்த பாடம் எடுத்து படிப்பது என்ற குழப்பம்  வந்துவிடும். அதற்கு காரணம் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தேர்வு செய்யும்போது அது எதிர்காலத்தை வளமானதாக்குமா? வேலைவாய்ப்பு  கிடைக்குமா? என்பது போன்ற எண்ணங்கள்தான்.



ஒரு பழமொழி உண்டு ‘எத்தை தின்றால் பித்தம் தீரும்?’ என்று, அதுபோலத்தான் எதைப் படித்தால் வேலை கிடைக்கும் என மாணவர்களும், இளைஞர்களும் அலையாய் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இந்தப் பகுதியில் தொடர்ந்து சில பட்டப்படிப்பு,  பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்புகள் குறித்து பார்க்கலாம்.

12-ஆம் வகுப்பு முடித்ததும் அடுத்து என்ன படிக்கலாம் என்பதைப் பலரும் 11ஆம் வகுப்பில் தேர்ந்தெடுத்திருப்பார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல்  படிப்புகளை தங்கள் கனவாக நினைத்திருப்பார்கள். நீட் தேர்வு என்ற ஒன்று பலரது மருத்துவக் கனவை கனவாகவே வைத்துவிடுகிறது. அடுத்து அதிகரித்திருக்கும் பொறியியல் கல்லூரிகளால் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும், பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிடலாம் என்ற  நினைப்பு பலருக்கும் வந்துவிடுகிறது.

இப்படிப் படித்து வெளியேறுகிற அனைவருக்கும் வேலை கிடைத்துவிடுகிறதா என்றால், இல்லை என்ற கசப்பான பதில்தான் விடையாகக்  கிடைக்கும்.ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு உண்மையிலேயே பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கேற்ற திறமையும் இருந்தால்  அதைப் படிப்பதில் தவறில்லை.



ஆனால், பெற்றோர்கள் விரும்புகிறார்கள், அடுத்தவர்கள் படிக்கிறார்கள் என்பதற்காக அப்படிப்பில் சேர்வது வெற்றிக்கான வழியல்ல. பெரும்பாலான  மாணவர்கள் இவற்றைத் தாண்டி வேலைவாய்ப்பு தரக்கூடிய படிப்புகளும் அவற்றில் இருக்கிற பிரத்யேக பாடப்பிரிவுகள் குறித்தும் அவற்றுக்கு இருக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்தும் அறியாமல் இருக்கிறார்கள்.

எதைப் படித்தாலும் அதில் சாதிக்கக்கூடிய ஆளுமையை வளர்த்துக்கொண்டால் லட்சியத்தை அடைவது எளிது. அவை நீங்கள் விரும்பும் துறையில்  வேலைவாய்ப்பை பெற்றுவிடவும், சுயதொழில் தொடங்கவும் கைகொடுக்கும். வாழ்வை வளமாக்க சிறப்பான எதிர்காலம் கொண்ட குறுகிய காலப்படிப்புகள், பல துறைகளிலும் குவிந்துகிடக்கின்றன.

அவற்றைப்பற்றி சென்னை வடபழனியில் உள்ள டாவின்சி மீடியா காலேஜ் நிர்வாக இயக்குநரும் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு VFX  செய்தவரும் இந்தியாவின் முதல் டிஜிட்டல் திரைப்படத்தை உருவாக்கியவருமான  அருள் மூர்த்தி என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். ‘‘கலை மற்றும் அறிவியல் படிப்புகளைத் தாண்டி பல்வேறு வித்தியாசமான படிப்புகள் உள்ளன.

அவை ஒரு மாணவனுக்குள் என்னவிதமான திறமை இருக்கிறதோ அதை வெளியே கொண்டுவந்து பிரசித்தி பெற செய்பவை.  உதாரணமாக,  இளங்கலைப் பட்டப்படிப்பில் (UG B.Sc Degree- 3 ஆண்டுகள்) அனிமேஷன் (Animation), டிஜிடல் டிசைன் & கேம் ஆர்ட் (Digital  Design & game Art), கேம் டிசைன் (Game Design), விஷூவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects), மீடியா டெக்னாலஜி (Media  Technology), விஷுவல் கம்யூனிகேஷன் (Visual Communication) போன்ற படிப்புகள் உள்ளன. தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி.

அதேபோல் பட்டயப்படிப்பில் (Diploma) அனிமேஷன் (Animation), விஷூவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects), டிஜிட்டல் டிசைன் &  கேம் ஆர்ட் (Digital Design & game Art), மீடியாடெக்னாலஜி (Media Technology), விஷுவல்கம்யூனிகேஷன் (Visual  Communication) போன்ற படிப்புகள் உள்ளன.  தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

முதுகலைப் பட்டப்படிப்பில் (Master’s Degree) எம்.எஸ்சி. அனிமேஷன் (M.Sc.Animation), எம்.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் (M.Sc. Visual Communication) ஆகிய படிப்புகளும் உள்ளன. தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு” என்கிறார் மூர்த்தி.

முதலாவதாக Animation துறையைப் பற்றிப் பார்ப்போம். மனிதர்களைக்கொண்டும், பொருட்களைக் கொண்டும் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள்  ஒரு கதையினை உயிர்பெற வைத்தன. அதாவது, உயிர்கள் மற்றும் புறப்பொருட்களைக்கொண்டு கதைகள் உருவம் தீட்டப்பட்டன. ஆனால்,  அனிமேஷனிலோ எல்லாமே சித்திரங்கள். உயிரற்றவை.

ஆனால், கலைஞர்களின் உதவியுடன் ஒரு புது உலகத்தையே உருவாக்கியது. எந்த ஒரு பொருளுக்கும் உயிர் கொடுக்கப்பட்டது. ஒரு பென்சில் கூட  மனிதனைப்போல ஓடும் விளையாடும். Animation என்ற வார்த்தைக்கு உயிரூட்டுதல் என்று அர்த்தம். எனவே, அவற்றை நாம் தமிழில்  உயிரூட்டப்பட்ட சித்திரங்கள் அல்லது உயிர்ச்சித்திரங்கள் என அழைக்கலாம்.

டெக்னாலஜிக்கு ஏற்ப அதிவேகமாக தன்னையும் தயார்படுத்திக்கொண்டு, எண்ணிப் பார்க்க இயலாத விஷயங்களை கண்முன்னே காட்டும் சிறப்பு  அனிமேஷன் துறையால் மட்டுமே சாத்தியப்படும் என்றால் மிகையாகாது. கம்ப்யூட்டர் துறையை பொறுத்தமட்டில் செல்வாக்கும், செருக்கும் பெற்ற  துறையாக விளங்குகிறது. ஒரு நிழற்படத்தை திரையில் உயிரோட்டமாக நகரச் செய்வதே அனிமேஷன்.

இது திரைப்படத்திற்கான ஒரு துறை என்றிருந்த காலம் மாறி கல்வி, ஆய்வு எனப் பல்வேறு துறைகளைத் தன் கைவசமாக்கியுள்ளது. சிறுவர் முதல்  முதியவர் வரை, கல்வி முதல் சினிமா வரை அனிமேஷன் காட்சிகளை விரும்பாதவர் எவரும் இல்லை என்றே கூறலாம். 3டி அனிமேஷன்  செயலாக்கம் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரிடமும் பிரசித்தி பெற்று வருகின்றன.’’ என்று சொல்லும் மூர்த்தி அதில் என்னென்ன  பாடப்பிரிவுகள் உள்ளன வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் விவரித்தார்.

வேலை வாய்ப்புகள்: இதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், மாடுலர் லே அவுட் ஆர்டிஸ்ட், கிளீன் அப் ஆர்டிஸ்ட், ஸ்கேனர் ஆபரேட்டர்,  டிஜிட்டல் இங்க் அண்ட் பெயின்ட் ஆர்டிஸ்ட், கீ ஃபிரேம் அனிமேட்டர், பேக்கிரவுண்ட் ஆர்டிஸ்ட் , அனிமேட்டர் அனிமேஷன் ஃபிலிம், டிசைன் ஃபிலிம்  மேக்கிங், அனிமேஷன் கேம் டிசைன், வீடியோ கேம் டிசைன், 2டி, 3டி, மாடுலர் விஷூவல் எஃபெக்ட் ஸ்பெஷல் எஃபெக்ட். கிரியேட்டர் கேரக்டர்  டிசைனர் இன்டராக்சன் டிசைனர் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

தனித்திறன்: பொதுவாக துருதுருவென அனைவரிடத்திலும் சகஜமாக பேசுவது, ஆடுவது, வித்தியாசமாக சிந்திப்பது போன்ற சாராம்சங்களை கொண்ட  சிட்டி ரோபோவா நீங்கள்? உங்களுக்கான துறைதான் இது. சார்ப்பான கிரியேட்டிவிட்டி கொண்ட ஒருவரின் கற்பனை சக்திக்கான சவால் என்று கூட  கூறலாம்.

இதற்கு ஓவியம் வரைவதில் அடிப்படைத் திறனும் ஆர்வமும் பெற்றிருப்பது அடிப்படைத் தேவை. கம்ப்யூட்டரை கையாளும் திறன் பெற்றிருப்பது  கூடுதல் பலம். மருத்துவம், பொறியியல் என்ற காலகட்டம் மாறி அதிக வேலைவாய்ப்பும், கைநிறைய சம்பளமும் வழங்கும் துறையாக விளங்கி  வருகிறது. இதில் ஒரு மாத படிப்பு முதல் டிகிரி வரை பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

சம்பளம்: தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.80 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். ஆரம்பகட்டத்தில்  ரூ.10ஆயிரம் முதல் ரூ.15,000 வரை பெற முடியும்.

அனிமேஷன் துறை கார்ட்டூன்களை உருவாக்கும் துறை என்பதைத் தாண்டி, நவீன வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் அவசியமான  ஒன்றாகிவிட்டது. உதாரணமாக, ஒரு புதிய பொருளை உருவாக்கி அதனை சந்தைக்கு கொண்டுவர,  Visualisation முறை இப்போது  முக்கியமான அங்கம் வகிக்கிறது. இது முக்கியமாக அனிமேஷன் தொழில்நுட்பத்தை கொண்டே நடக்கிறது.

மேலும் விவரம் வேண்டுவோர், www.davincimediacollege.com இணையதளம் மூலமாகவும் 97890 59048 /46 என்ற எண்களை  தொடர்புகொள்ளலாம். அடுத்த அத்தியாயத்தில் Game Design படிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்…’’ என்று முடித்தார்.

- தோ.திருத்துவராஜ்