தேசிய திறந்தநிலைப் பள்ளியில் சேர்வதற்கான நடைமுறை!



வழிகாட்டுதல்

பொருளாதாரப் பின்னடைவு, உடல்நலக் குறைவு, பள்ளி சென்று நேரம் வீணாவதைத் தடுக்க, நேர மேலாண்மையை விரும்புதல், பணியாற்றிக்கொண்டே படித்தல், விரும்பிய அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் அந்தப் பாடங்களைப் படித்தல், முன்னர் வேறு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பள்ளிப்படிப்பைத் தொடர்தல் போன்ற தேவைகள் உள்ளவர்களுக்குத் தேசிய திறந்தநிலைப் பள்ளி (NIOS - National institute of open schooling) பெரிதும் பயன்படுகிறது.

தேசிய திறந்தநிலைப் பள்ளியின் செயல்பாடுகள், பயன், பாடத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்களைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். இனி இப்பள்ளி யில் சேரும் முறை, கட்டணம், தொடர்பு முகவரி உள்ளிட்டவற்றை பார்ப்போம்.எவ்வாறு அனுமதி பெறுவது?

இப்பள்ளியில் சேர விரும்புவோர் www.nios.ac.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு தேவைகளுக்கேற்ப நான்கு வழிகள் (Streem) கொடுக்கப்பட்டுள்ளன.Streem-I என்பது செகண்டரி, சீனியர் செகண்டரி வகுப்புகளுக்கு Block-I-ல் மார்ச் முதல் செப்டம்பர் வரையும், தாமதக் கட்டணமின்றியும், ஆகஸ்டு 15 முதல் ஆகஸ்ட் 31 வரை  ரூ.200 தாமதக் கட்டணம், செப்டம்பர் வரை ரூ.700 தாமதக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

Block-2-வில், செப்டம்பர் முதல் ஜனவரி வரை தாமதக் கட்டணமின்றியும், பிப்ரவரி 15 வரை ரூ.200 தாமதக் கட்டணத்துடனும், பிப்ரவரி 16 முதல் மார்ச் வரை ரூ.400 தாமதக் கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு வருடம் முழுதும் விண்ணப்பிக்கலாம்.
பிளாக் I தேர்வு ஏப்ரல் - மே மாதத்தில், பிளாக் II தேர்வு அக்டோபர் - நவம்பரில் நடைபெறும்.

Streem-2 என்பது முன்னரே ஏதேனும் ஒரு அரசுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய தேர்வாகும். இதற்கு மே-1 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்.

Streem-3 என்பது செகண்டரி யில் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற, தோல்வியடையா ஆன் டிமாண்ட் எக்ஸாமினேஷன் சிஸ்டம் (ODES - On Demand Examination system) ஆகும். தேவையானவர்கள் ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், வணிகப் படிப்பு (Business Studies) ஹோம் சயின்ஸ், உளவியல், இண்டியன் கல்சர் அண்ட் ஹெரிட்டேஜ், பெயின்டிங், டேட்டா என்ட்ரி ஆபரேஷன் என்ற பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அனுமதி ஆண்டு முழுமையும் நடைபெறும்.

Streem-4 என்பது சீனியர் செகண்டரி யில், ஏற்கனவே தேர்வு பெற்றவர்கள், ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், வணிகப் படிப்பும், கணக்கியல், ஹோம் சயின்ஸ், உளவியல், சமூகவியல், பெயின்டிங், சுற்றுப்புற அறிவியல் டேட்டா என்ட்ரி ஆபரேசன் ஆகிய பாடங்களுக்கு ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரம்:

Streem-I செகண்டரி படிப்பு களுக்கு பொதுப் பிரிவினருக்கு 5 பாடங்களும், ஆண்களுக்கு ரூ.1485, பெண்களுக்கு ரூ.1210, எஸ்.சி., எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.990 ஆகும். ஒவ்வொரு அதிகப்படியான பாடத்திற்கும் ரூ.600 ஆகும்.

இதில் சீனியர் செகண்டரி படிப்பிற்கு 5 பாடங்களுக்குப் பொதுப் பிரிவனருக்கு ஆண்களுக்கு ரூ.1650, பெண்களுக்கு ரூ.1375, மற்றும் எஸ்.சி., எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிக்கும் ரூ.1075 ஆகும். இவர்கள் ஒவ்வொரு அதிகப் பாடத்திற்கும் ரூ.600 செலுத்த வேண்டும்.

Stream I-ல் ஆன்லைனில் படிப்பவர்கள் செகண்டரியில் பதிவுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.400, புத்தகங்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.300, டிரான்ஃஸ்பர் ஆஃப் கிரேடிங்குக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150 செலுத்த வேண்டும். சீனியர் செகண்டரிக்கு முறையே இவை ரூ.400, ரூ.330, ரூ.150 ஆகும்.

Stream 2, 3, 4- செகண்டரி, சீனியர் செகண்டரி (Stream 2) இவற்றில் பதிவுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.400, எழுத்துத் தேர்வு ரூ.250, செய்முறை ரூ.120, டிரான்ஸ்பர் ஆஃப் கிரேடிங் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150/- அதிகப் படியான பாடத்துக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.600 செலுத்த வேண்டும்.

Stream -3-ல் செகண்டரி படிப்புக்கும் இவை முறையே ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.400, (ரூ.500 + ரூ.200) ரூ. 150, ரூ.600 & ரூ. 300 ஆகும்.

Stream -4 - சீனியர் செகண்டரி இவை முறையே ரூ. 400, (ரூ.500 + ரூ.200), ரூ.150, ரூ. 600 ஆகும்.

பொதுத்தேர்விற்கு - ஏப்ரல் - மே தேர்விற்கு டிசம்பர் ஒன்று முதல் டிசம்பர் 31 வரை தாமதக் கட்டணம் இன்றியும், ஜனவரி 1 முதல் ஜனவரி 10 வரை ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.100 தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இதேபோல், அக்டோபர் - நவம்பர் தேர்விற்கு, ஜூன் 1 முதல் 30 ஜூன் வரை தாமதக் கட்டணம் இன்றியும், ஜூலை 1 முதல் ஜூலை 10 வரை ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.1000 வீதம் தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

செகண்டரி, சீனியர் செகண்டரிக்கு தேர்வுக் கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.250, செய்முறைத் தேர்விற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.120 செலுத்த வேண்டும். இறுதி நாட்கள் முடிந்த நிலையில்கூட ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.150 செலுத்தி தேர்வு எழுதலாம்.

மாநிலக் கல்வி வாரியம் (State Board) சென்ட்ரல் போர்டு ஆஃப் செகண்டரி எஜுகேசன் (CBSE), இண்டியன் ஸ்கூல் சர்ட்டிபிகேட் (ISC) (CIE) என்ற கல்வி வாரியம் போல, NIOS பள்ளிப்படிப்பைத் திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி வழியில் வழங்குகிறது.

வானொலி, தொலைக்காட்சி, ஆன்லைன், வசதிகளை இந்த அமைப்பு பெற்றுள்ளது. நூல்கள் வழங்கப்படுகின்றன. NIOS - சான்றிதழ்கள் உயர்படிப்புகளில் சேரவும், நுழைவுத்தேர்வுகள் எழுதவும், வேலைவாய்ப்புகளுக்கும் ஏற்புடையவையாகும்.

தொடர்பிற்கு National Institute of Open Schools, Literacy, MHRD, Government of Inida, A-24-25, Institutional Area, Sector 62, Noida  201309, Uttar Pradesh. Web : www.nios.oc.in

சென்னை & பாண்டிச்சேரி

National Institute of Open School, Regional Centre, Lady Wellingten Complex, Kamaraj Salai, Triplicane, Chennai - 600 005. Tamilnadu. 044-28442237குறிப்பு : தேர்ச்சிக்குக் குறைந்தது, எழுத்துத் தேர்விலும், செய்முறையிலும் 33 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.               

ஆர்.ராஜராஜன்