+1 ஆங்கிலம் முதல் தாள்! முழு மதிப்பெண் பெறும் வழிகள்!+1 பொதுத் தேர்வு டிப்ஸ்

நீட் பொதுத்தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியதன் காரணமாக தமிழகப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளான +1 வகுப்பிற்குப் பொதுத் தேர்வு என தமிழக அரசு அறிவித்ததையடுத்து +1 மாணவர்களுக்கும் வழிகாட்டுதல் அவசியமாகிவிட்டது.

இந்தச் சூழலில், “முழுக்கவனத்தோடும் திட்டமிட்டும் படித்தால் பொதுத் தேர்வைக் கண்டு அச்சம்கொள்ளத் தேவையில்லை” என்கிறார் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஏ.இளங்கோவன். அவர் தரும் ஆலோசனைகளை இனி பார்ப்போம்…

+1 ஆங்கிலம் முதல் தாள் 90 மதிப்பெண்களை உள்ளடக்கிய Part - A, B, C, D என்ற நான்கு பிரிவுகளாக வினாக்களைக் கொண்டது. இவ்வினாக்களுக்கு 1, 2, 3, 4, 5 என Part வாரியாக மதிப்பெண் வழங்கப்படும்.Part A-ல் 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் பல்வேறு வகைகளில் கொள்குறி வினாவாக (Objective type கேட்கப்படும் Part A-ல் 1 முதல் 3 வது கேள்வி வரை synonams ஆகவும் 4 முதல் 6 வரை auttayms ஆகவும் கேட்கப்படும். இவ் வினாவிற்கு விடையயெழுத ஒவ்வொரு பாடத்தின் பின்வரும் வினாவை (Texfugul exercise question) நன்கு பார்த்தாலே போதுமானது.

அடுத்து 7 மற்றும் 8 கேள்விகளுக்கு

synabirti cation 7வது வினாவில் குறிப்பிட்டுள்ள synable typeஐ பார்த்து (Mono syllasric -1 Disyllabic -2. trisyllabic 3 tetra syllabic - 4 panta syllabic - 5 கொடுக்கப்பட்டுள்ள நான்கு Option உள்ள சரியான wordஐ தேர்வு செய்து எழுத வேண்டும். 8வது கேள்வியில் ஒரே வார்த்தை நான்கு type-ல் அசை பிரித்து (syllabity) கொடுத்திருப்பார்கள். சரியானதைத் தேர்வு செய்து எழுத வேண்டும்.

அடுத்து 9 மற்றும் 10வது கேள்வி

Abbresation Acronym  கொடுக்கப்பட்டுள்ள Abbresation அல்லது Acronymsக்கான சரியான விரிவாக்கத்தைத் தேர்வு செய்து எழுத வேண்டும்.

11 மற்றும் 12வது கேள்வி

கொடுக்கப்பட்டுள்ள Combination-க்கு பொருத்தமான வார்த்தையைத் தேர்வு செய்து எழுதவேண்டும்.

13 வது கேள்வி

Blended words - கொடுக்கப்பட்டுள்ள Blended word-ன் சரியான Combination தேர்வு செய்து எழுத வேண்டும். மிகவும் எளிதான இவ்வினாவிற்குப் புத்தகத்தில் வரும் பயிற்சி வினாக்களை (159) படித்தாலே போதுமானது.

14வது கேள்வி

Clipped Words - கொடுக்கப்பட்டுள்ள வார்த்தையின் Clipped formஐ (வார்த்தையின் சுருக்கத்தை) தேர்வு செய்து எழுத வேண்டும். மிகவும் எளிதான இவ்வினாவிற்குப் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாவை (Page 159, 160) தேர்வு செய்து எழுத வேண்டும். 15வது கேள்வி - Foreign words and its meaning - கொடுக்கப்பட்டுள்ள வேற்றுமொழிச் சொல்லின் சரியான அர்த்தத்தை (Meaning) தேர்வு செய்து எழுத வேண்டும்.

16வது கேள்வி

Definition of a word - கொடுக்கப்பட்ட வார்த்தையின் சரியான அர்த்தத்தைத் தேர்வு செய்து எழுத வேண்டும். பாடப்புத்தகத்தில் Page no. 228, 229 ஆகிய பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் படித்தாலே போதும் இவ்வினாவிற்கு விடை எழுதிவிடலாம்.

17வது கேள்வி 

Idioms and its meaning - கொடுக்கப்பட்டுள்ள Idioms சொற்றொடருக்குப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். பாடப் புத்தகத்தில் 230, 231, 232, 233 ஆகிய பக்கங்களில் உள்ள வினாக்களைப் படித்தாலே போதும் இக்கேள்விக்கு எளிமையாக விடை எழுதிவிடலாம்.

18 - 19வது கேள்வி

Phrasal Verbs - ஒரு வினைச்சொல்லும் (Verb) வேறு ஒரு இடைச் சொல்லும் (Preposition or Adverb) இணைந்து புதிய அர்த்தத்தை (Meaning) கொடுத்தால் அது Phrasal Verb (கூட்டு வினைச்சொல்) ஆகும். இதன் அர்த்தத்தை ‘word by word’ ஆகப் புரிந்து கொள்ளக்கூடாது. பாடப்புத்தகத்தில் 230 முதல் 233 வரையுள்ள பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் PhrasaL Verbஐ Refer செய்தாலே போதும் இவ்வினாவிற்கு எளிதாக விடை எழுதிவிடலாம்.

20வது கேள்வி

Prefix and Suffix கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு முன்னால் un, in, dis, il, mis, im, pre, etc. போன்றவைகளைச் சேர்ப்பது prefix ஆகும். Example- dislike. கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்குப் பின்னால் able, mis, ment, ance, tion, or ..... etc உள்ளிட்டவைகளை சேர்ப்பது Suffix ஆகும். எனவே, மாணவர்கள் கொடுக்கப்பட்ட வார்த்தை பொருத்தமான Prefix அல்லது suffix-ஐ தேர்வுசெய்து எழுத வேண்டும்.  பாடப்புத்தகத்தில் பக்கம் 154 / 155-ல் உள்ள Prefix suffix-ஐ பார்த்தாலே போதுமானது.

Part B வினா எண் 21 முதல் 30 வரையுள்ள 2 மதிப்பெண் வினாக்கள் இதில் கேள்வி எண் 21 முதல் 26 வரை Poetry Comprehension and Literary Appreciation கொடுக்கப்பட்டுள்ள 6 வினாக்களில் ஏதேனும் 4 வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும். ஒவ்வொரு ‘poem’ன் paraphrase, poetic devices, Rhymming scheme உள்ளிட்டவைகளை வகுப்பில் கவனித்தாலே போதும் இவ்வினாக்களுக்கு எளிதாக விடை எழுதிவிடலாம்.

27வது கேள்வி முதல் 30 வரை

Transformation of sentences - இக்கேள்விகளுள் ஒன்று Compulsory Question (Q.No.27). இப்பகுதியில் Reletive clause, simple, compound, complex உள்ளிட்ட வினாக்கள் இடம்பெற்றிருக்கும்.

28வது கேள்வி

Direct and Indirect speaches : Direct speech-ல் இருந்து indirect speech ஆகவோ அல்லது Direct speech-ல் இருந்து indirect ஆகவோ மாற்ற வேண்டும்.

29 & 30வது கேள்வி

simple, compound, complex  Transformation-கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை simple ஆகவோ compound அல்லது complex sentence ஆக மாற்ற வேண்டும். simple sentence என்பது ஒரு main clause அல்லது ஒரு phrase + main clauseஐ கொண்டிருக்கும். compound sentence என்பது main clause + conjunction + main clause என்ற அமைப்பில் இருக்கும். complex sentenceஐ பொருத்தமட்டில் subordinate clause + main clause என்ற வகையில் இருக்கும்.

31 முதல் 40 வரையிலான 3 மதிப்பெண் வினாக்கள்

இதில் 31 முதல் 36வது கேள்வி வரை: Prose shot questions - கொடுக்கப்பட்டுள்ள 6 வினாக்களில் ஏதேனும் 4க்கு விடை எழுத வேண்டும். இவ்வினாக்கள் மொத்தமுள்ள 6 prose lesson-ல் இருந்து கேட்கப்படும். எனவே, proseஇல் உள்ள வினாக்களைத் தெளிவாகப் படித்துக்கொள்ளவும். 37 முதல் 40வது கேள்வி வரை : ERC  Poetry- பாடப்புத்தகத்தில் மொத்தமுள்ள 6 poem-யிலும் உள்ள முக்கிய வரிகளை நினைவில் கொண்டாலே இவ்வினாக்களுக்கு விடையை எழுதலாம் (Name of the poem -1 mark poet name : 1 mark & explanation - 1 mark.

41 முதல் 47 வரையிலான ஏழு 5 மதிப்பெண் வினாக்கள் இதில் 41வது கேள்வி - Paragraph (prose) இவ்வினாவில் இரண்டு Paragraph கேட்கப்படும். இவற்றில் ஒன்றுக்கு விடையெழுதினால் போதும் (Either or type) (best to prepare paragraph from first 3 lesson or the last 3). 42வது கேள்வி- paragraph (poetry)- poetry பகுதியில் இருந்து இரண்டு paragraph வினாக்கள் கேட்கப்படும். இரண்டில் ஒன்றுக்கு பதில் எழுத வேண்டும். முதல் மூன்று poemக்கான paragraph அல்லது கடைசி 3க்கான paragraphஐ மனப்பாடம் செய்தாலே போதுமானது.

43 வது கேள்வி

Correct the Errors (or) Correct and Edit a Passage. Correct the Errors in sentences - கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் உள்ள errorஐ (தவறை) திருத்தி சரியாக எழுத வேண்டும். பொதுவாக errors (பிழைகள்) (i) tense (ii) singular - plurel (iii) Degrees (iv) articles (v) prepositions vi) conjunction vii) If clause உள்ளிட்ட இலக்கணப் பகுதியில் இருக்கும் பிழையை சரி செய்து எழுத வேண்டும்.

Correct and Edit a passage - ஒரு passage கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள தவறுகளை திருத்தி சரியாக எழுத வேண்டும்.

44வது கேள்வி

Preposition (or) Tense forms Preposition. கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் உள்ள கோடிட்ட இடங்களை Preposition கொண்டு நிரப்ப வேண்டும். இவை proseஇல் உள்ள textஐ கொண்டே வினாவை தயாரிப்பதால் prose பாடத்தை ஒன்றிரண்டு முறை வாசிப்பது மிகவும் அவசியம்.
(OR)Tense forms: இவ்வினாவிற்கான விடையை எழுதும்போது வினைச் சொல்லின் காலம், செய்வினை, செயப்பாட்டுவினை ஆகியவற்றை அறிந்து பயிற்சி செய்ய வேண்டும்.

45வது கேள்வி

sentence - Field Matching (or) Completing the news items. a) Field Matching : கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை வாசித்து எது எத்துறையைச் சார்ந்தது என்பதை அறிந்து எழுத வேண்டும். எளிமையாக 5 மதிப்பெண் பெறக்கூடிய வினா இது.b) completing the news itms : கொடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள் செய்தி பத்தியில் உள்ள கோடிட்ட இடங்களை அவற்றுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைக்  கொண்டு நிரப்ப வேண்டும்.

46வது கேள்வி

American English / British English (or) Forming Derivatives. கொடுக்கப்பட்டுள்ள British Englishக்கு இணையான American English வார்த்தையை எழுத வேண்டும். இரண்டாவது optional வினாவாக கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு derivatives எழுத வேண்டும்.

47வது கேள்வி

Modal / Quasi - modal (or) Homophones - முதல் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் உள்ள கோடிட்ட இடங்களை modal / semi / quasi - modal  கொண்டு நிரப்பவும். will, would, shall, should, can, could, may, might, must, need, dare, ought to, used to போன்ற modal / semi / quasi - modal, verbஐ உரிய இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது optional வினாவாகக் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வினாக்களில் முதல் துணை வினா Noun, verb, adjective, adverb forms எழுதுவது கொடுக்கப்பட்டுள்ள வார்த்தையை Nounஆகவும், verb ஆகவோ, objective ஆகவோ, adverb ஆகவோ கேட்கப்படும். இதில் வினாவை பொறுத்து வாக்கியம் அமைத்து எழுத வேண்டும்.

இதன் இரண்டாவது துணைவினா Homophone,கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் உள்ள கோடிட்ட இடங்களை சரியான Homophoneஐ கொண்டு நிரப்ப வேண்டும்.இப்படித்தான் +1 மாணவர்களுக்கான ஆங்கிலப்பாட முதல்தாள் வினாக்கள் அமைந்திருக்கும். ஆங்கிலப் பாடத்தின் இரண்டாம் தாளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம். கவனமாக படியுங்கள் பதற்றமின்றி எழுதி முழு மதிப்பெண்களைப் பெறுங்கள் மாணவர்களே!
வாழ்த்துகள்!