TNPSC அனைத்துப் போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேர்வதற்குப் பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில் மாநில அரசுப் பணிகளுக்காக அந்தந்த மாநிலத்திலும் தனித் தேர்வாணையம் அமைக்கப்பட்டு அதன்மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அந்தவகையில் தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி. என்று சொல்லப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திவருகிறது. டி.என்.பி.எஸ்.சி-ன் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு பாடத்திட்டங்களிலும் மிக அவசியமான குறிப்புகளை இந்தப் பகுதியில் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக அறிவியல் பாடத்திட்டத்தை இனி பார்ப்போம்.

அலைகள் இயக்கம் மற்றும் ஒலியியல் அலைகள் இரு வகைப்படும் 

1. இயந்திர அலைகள்

2. மின்காந்த அலைகள்

* ஒலி அலைகள், நீர்ப் பரப்பில் தோன்றும் அலைகள், நில நடுக்க அலைகள் ஆகியவை இயந்திர அலைகள் ஆகும்.

* ஒளி, ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர், எக்ஸ் கதிர் போன்றவை மின்காந்த அலைகள் ஆகும்.

* மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. இவை வெற்றிடத்திலும் பரவக்கூடியவை.

* இயந்திர அலைகள், அலை பரவும் முறையின் அடிப்படையில் குறுக்கலைகள், நெட்டலைகள் என இரு வகைப்படும்.

* ஊடகத்தில் அலை பரவும் திசைக்குச் செங்குத்துத் திசையில் துகள்கள் அதிர்வுற்றால் அவை குறுக்கலைகள் ஆகும்.

* நீர்ப்பரப்பின் மீது உண்டாகும் அலைகள், சிதார் மற்றும் வயலின் போன்ற கருவிகளில் இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளில் ஏற்படும் அலைகள் ஆகியவை குறுக்கலைகள் ஆகும்.

* ஊடகத்தில் குறுக்கலைகள் முகடு அகடுகளாகப் பரவுகின்றன.

* இரு அடுத்தடுத்த முகடுகளுக்கு அல்லது அகடுகளுக்கு இடையேயுள்ள தொலைவு ஓர் அலைநீளம் எனப்படும்.

* முகடுக்கும், அகடுக்கும் இடைப்பட்ட தொலைவு /2 ஆகும்.

*  என்ற குறியீட்டை லேம்டா என்று உச்சரிக்க வேண்டும்.

* ஊடகத்தில் அலை பரவும் திசையிலேயே துகள்கள் அதிர்வுற்றால் அவை நெட்டலைகள் ஆகும்.

* நெட்டலைகள் திட, திரவ வாயுக்களில் பரவும்.

* ஒலி அலைகள், காற்று அல்லது வாயுக்களில் நெட்டலைகளாகப் பரவுகின்றன.

* நெட்டலைகள் ஊடகத்தில் நெருக்கங்களாகவும், நெகிழ்வுகளாகவும் பரவுகின்றன.

* இரு அடுத்தடுத்த நெருக்கங்கள் அல்லது நெகிழ்வுகளுக்கு இடையே உள்ள தொலைவு ஓர் அலை நீளம் () ஆகும்.

* நெருக்கங்களுக்கும், நெகிழ்வுகளுக்கும் இடையே உள்ள தொலைவு /2 ஆகும்.

* அதிர்வுறும் துகள் மையப்புள்ளியிலிருந்து அடைந்த பெரும் இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும். இதன் அலகு மீட்டர்.

அலைவு நேரம் 

* அதிர்வுறும் துகளின் ஒரு முழு அலைவுக்கான காலம், அலைவு நேரம் எனப்படும். இதன் அலகு, விநாடி.
அதிர்வெண் 
* ஓர் ஊடகத்தில் அலை பரவும்போது ஒரு வினாடி நேரத்தில் துகள்களில் உண்டாகும் அலைவுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும்.
* அதிர்வெண், அலை நீளம், அலையின் திசைவேகம் இவற்றிற்கான தொடர்பு அலையின் திசைவேகம்  
 = =    = 
எனவே அலையின் திசைவேகம், அதிர்வெண் மற்றும் அலை நீளம் ஆகியவற்றைப் பொறுத்தது.                                                                                                             
பரப்பு இழுவிசை 

* நுண்புழை ஏற்றம் நடைபெறக் காரணம் பரப்பு இழுவிசை.

* நீர்ப்பரப்பின் மீது எண்ணெய் ஊற்றினால் நீரின் பரப்பு இழுவிசை குறைகின்றது. அதன் காரணமாகக் கொசுக்குஞ்சுகள் நீரினுள் மூழ்கி அழிகின்றன.

* கடல் கொந்தளிப்பு ஏற்படும்போது, உயரமான, சீறும் அலைகள் உருவாகின்றன. இதனைத் தடுக்க பீப்பாய்களில் உள்ள எண்ணெய் வழக்கமாகக் கொட்டுவார்கள். அதன் காரணமாகக் கடல்நீரின் பரப்பு இழுவிசை குறைந்து, அலைகளின் வலிமை தணிக்கப்படும்.

* பேனா முனை இயங்கும் தத்துவம் பரப்பு இழுவிசையாகும்.

* கோணத்திசை வேகத்தின் அலகு ரேடியன் / வினாடி.மையநோக்கு விசை செயல்படும் செயல்கள்

* கோள்கள் வட்டப்பாதையில் சுற்றுதல்.

* துணி துவைக்கும் இயந்திரம்.

* ஒரு கயிற்றின் முனையில் சிறு கல்லைக் கட்டி சுற்றுதல்.

* வாகனங்கள் சேறு, சகதிகளில் சிக்கித் தவிப்பது ‘மையநோக்கு விசை’ குறைவினால்தான்.

மைய விலக்கு விசை

* வாட் கவர்னர் எஞ்சினில் செயல்படும் விசை மைய விலக்கு விசை.

* சர்க்கஸின் ‘மரணக்கூண்டில்’செயல்படும் விசை, மைய விலக்கு விசை.

* கோள்கள், சூரியன் ஆகியவற்றின் இயக்கத்தை நன்கு ஆராய்ந்து 16&ம் நூற்றாண்டில் வெளியிட்டவர், டைகோ பிராஹே.

* கோள்களின் இயக்கம், சுற்றுப்பாதை விதியை வெளியிட்டவர் கெப்ளர்.

* ஒவ்வொரு விசைக்கும், சமமான எதிர்விசை உண்டு என்கிற, ராக்கெட்டில் பயன்படும் இந்த விதி, ‘நியூட்டன் மூன்றாம் விதி’ஆகும்.

* மழைத்துளிகள் கோள வடிவம் பெறக் காரணம் பரப்பு இழுவிசையே.

* மரங்களிலும், தாவரங்களிலும் நீர் மேலே உறிஞ்சப்படுதல், திரியின் வழியே எண்ணெய் ஏறுதல், ஃபில்லர் மையை உறிஞ்சுதல் அனைத்துமே நுண்புழை ஏற்றம் ஆகும்.

* பரப்பு இழுவிசையின் அலகு நியூட்டன்/ மீ2.

* திரவம் பாயும் வீதத்தை கணக்கிடும் வென்சுரி மீட்டரில் பயன்படுவது பெர்னௌலி தத்துவம்.

* பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் - 138.

* நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் - 4180.

* பாராபின் மெழுகின் தன்வெப்ப ஏற்புத்திறன் - 2900.

* மண்ணெண்ணெயின் தன்வெப்ப ஏற்புத்திறன் - 2090.

* பனிக்கட்டியின் தன்வெப்ப ஏற்புத்திறன் - 2130.

* கரைசல்களில் உள்ள வைரஸ்களை செறிவூட்ட -சுழலும் மைய விலக்கிகள் பயன்படுகின்றன.

* மூலக்கூறுகளுக்கு இடையே இருவகையான ஈர்ப்பு விசை செயல்படுகின்றன.

* மூலக்கூறு எல்லையின் வீச்சு - 10.

* மூலக்கூறு அடிப்படையில் பரப்பு இழுவிசையை விளக்கியவர் ‘லாப்லஸ்’

* பாகியல் எண்ணின் அலகு ‘நியூட்டன் வினாடி / மீ2.

* திரவம் பாயும் விகிதத்தைக் கணக்கிட உதவும் கருவி ‘வென்சுரி மீட்டர்’,

* குளிர்சாதனப்பெட்டியில் பயன்படும் திரவம் ‘பிரியான்’.

* வைரத்தின் மாறுநிலைக்கோணம் 24.40 C     
                                         
* மெழுகின் உருகுநிலை 570 C

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்குத் தொடர்புடைய அறிவியல் பாடத்திட்டத்தின் மேலும் சில பகுதிகளை அடுத்த இதழில் பார்ப்போம்.