ONGC நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி!



பயிற்சி

5031 பேருக்கு வாய்ப்பு!


இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுருக்கமாக ONGC (Oil and Natural Gas Corporation)என அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் இதன் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. தற்போது சென்னை உள்பட 17 கிளை மையங்களில் அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 5031 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் தமிழகக் கிளைக்கு 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்ற கிளை வாரியான பணியிட விவரம் : நாசிரா - 782, மும்பை - 560, அங்லேஸ்வர் - 486, மெசனா - 450, ராஜமுந்திரி - 385, டேராடூன் -286, காரைக்கால் - 285, டெல்லி - 284, வதோதரா - 251, அகமதாபாத் - 226, ஜோர்கட் - 224, அகர்தலா - 187, ஹாசிரா - 181, யுரான் - 120, காம்பே -115, காக்கிநாடா - 105.

இந்தப் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்…
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், வர்த்தகம், கணிதம், பி.காம் பட்டப்
படிப்பு படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின், சிவில், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், பிட்டர் உள்ளிட்ட பிரிவில் பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர்களுக்குப் பணியிடங்கள் உள்ளன. அந்தந்தப் பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். கல்வித்தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிப் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.11.2017-ம் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அந்தந்தக் கிளையின் எச்.ஆர். பிரிவு அதிகாரி முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தமிழக விண்ணப்பதாரர்கள் ‘ONGC Cauvery Basin, I/C HRER, Thalamuthu Natarajan building, CMDA towers No.1, Gandhi Irwin Road, Egmore, Chennai 600008’ என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 3.11.2017.விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும், முழுமையான விவரங்களை அறிந்துகொள்ளவும் www.ongc.co.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கலாம்.