தனித்துவம் வாய்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழகம்!



வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுக் கல்வி எல்லோருக்கும் சாத்தியம்

வெளிநாடுகளில் சென்று உயர்கல்வியை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி தரம், பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள டாப் 10 பல்கலைக்கழகங்களைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக எட்டாவது இடத்தில் உள்ள University of Adelaide பற்றி இனி பார்ப்போம்.

யுனிவர்சிட்டி ஆஃப் அடிலெய்ட் தென் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் என்ற நகரத்தில் 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1876ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு 100 வருடங்களைக் கடந்து நிற்கிறது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பழைமையான பல்கலைக்கழகமான இதில் முதல் அறிவியல் பட்டதாரியாக ஒரு பெண் பட்டம் பெற்றார். மேலும் இப்பல்கலைக்கழகமானது மிகக் குறுகிய காலத்திலே கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கி தனித்துவம் பெற்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

காமன்வெல்த் பல்கலைக்கழகங்களுடன் இணைவுபெற்று செயல்பட்டு வரும் இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்தும் மற்றும் தனிப்பட்ட ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களின் தர வரிசையில்  அடிலெய்டு பலகலைக்கழகத்தை முதல் 150 பல்கலைக்கழகங்களுக்குள் ஒன்றாக வைத்துள்ளது. மேலும் இப்பல்கலைக்கழகத்தின்  சோஷியல் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் போன்ற துறைகள் உலக அளவில் முதல் 75ம் இடத்தில் உள்ளது.

இதன் கட்டமைப்பு, கல்வி தரம், ஆராய்ச்சிக்கு முன்னுரிமை தருவது போன்ற காரணங்களால் உலக அளவில் அதிக மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுக்கின்றனர். நானூறுக்கும் மேற்பட்ட இளநிலைப் படிப்புகளையும்  பல்வேறு முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இப்பல்கலைகழகத்தில் இருந்து பெறப்படும்  பட்டமானது  சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படுகிறது.
இங்கு வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் பற்றி பார்ப்போம்.

இளநிலைப் பட்டப்படிப்புகள்

Arts

Arts, Education,  Environmental Policy and Management,  Indigenous Programs, International Development, International Studies, Languages, Media, Music, Social Sciences, Engineering, Computer and Mathematical Sciences
Computer Science, Engineering, Mathematical Sciences
Health and Medical Sciences
Dentistry & Oral Health, Health and Medical Sciences, Medicine, Nursing, Psychology
Professions
Architecture and Built Environment, Business, Economics & Finance, Innovation & Entrepreneurship, Law
Sciences
Agriculture, Science

முதுநிலைப் பட்டப்படிப்புகள்

 Arts
 Art History, Curatorial and Museum Studies, Education, Environmental Policy and Management, Music, Translation and Transcultural Communication
Engineering, computer and Mathematical Science
Computer Science, Engineering, Mathematical Sciences
Health and Medical Sciences
Addiction Studies, Biostatistics, Counseling & Psychotherapy, Dentistry & Oral Health, Health Economics and Policy, Medicine & Surgery, Nursing, Psychology, Public Health & Translational Health Sciences
Professions
Architecture and Built Environment, Business, Economics & Finance, Commercialisation, Innovation and Entrepreneurship, Law, Project Management
Sciences
Agriculture, Science

இங்குப் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களால் பாடம் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வித் தரம் உயர்கிறது. இளநிலை படிக்கும் காலங்களிலேயே மாணவர்களை,  துறை சார்ந்த  ஆராய்ச்சி, சுயமாக சிந்திக்க வைத்தல், பேச்சுத் திறனை நெறப்படுத்தல் போன்றவற்றை கற்றுக்கொடுத்து சர்வதேச தரத்துக்கு இணையாக மாணவர்களை உருவாக்குகிறது. இப்பல்கலைக்கழகத்தின் அழகிய சூழலே மாணவர்களுக்குப் படிக்கும் மனநிலையை உருவாக்கிவிடும்.

மேலும் ஆராய்ச்சிப் படிப்புகளிலும், முதுநிலைகளிலும் சாதிக்க ஆர்வம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு உதவித்தொகைகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் முதுநிலைக் கல்விக்கான உதவித்தொகை விவரங்களுக்குத் தனி இணையதளம் ஒன்றை உருவாக்கி அதைச் செயல்படுத்திவருகிறது. மேலும் ஆஸ்திரேலிய அரசு தன் நாட்டிற்குப் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு  ஆராய்ச்சி மற்றும் பல்வேறு வகையான உதவித்தொகைளை வழங்கிவருகிறது. அதே சமயம் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ஒரு ஆண்டுக்குக் கல்விக் கட்டணமாக 31,000 டாலர்களில் இருந்து 42,000 டாலர்கள் வரை வசூலிக்கபடுகிறது.