அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Only and Only


ஏதோ முக்கியமான பணியில் ஆழ்ந்திருந்த ரகுவின் அருகே, “SPB sang a melody song in the auditorium yesterday” என்றபடியே வந்து நின்ற ரவி, “சார், SPB மட்டும்தான் பாடினார் அப்படிங்கறதுக்கு Only SPB sang…ன்னு சொல்லலாமா? அல்லது SPB only sang ன்னு சொல்லலாமா..? ‘இந்த’என்ற வார்த்தையை முன்ன பின்ன எப்படி போட்டாலும் அர்த்தம் ஒண்ணுதானுங்களா சார்?” என்றான்.

ரவியை ஒருகணம் பார்த்த ரகு “குட்கொஸ்ட்டின் ரவி! இந்த ‘வொன்லி’ என்ற வார்த்தையைக் கண்டமேனிக்குப்போடமுடியாது. அர்த்தம் மாறுபடும். உதாரணத்துக்கு, ‘Only SPB sang a melody song in the auditorium yesterday’ என்றால் SPBதான் பாடினார். வேற யாரும் பாடவில்லை எனப் பொருள்படும். இங்கு முக்கியத்துவம் ‘எஸ்பீபி’என்ற சப்ஜெக்ட்டுக்கு தரப்படுகிறது.

அடுத்து ‘SPB only sang a melody song in the auditorium yesterday’என்றால் அவர் பாடினார் (பாட மட்டும் செய்தார்… படிக்கவில்லை) எனப் பொருள்படும். இங்கு முக்கியத்துவம் ‘பாடுதல்’ என்ற வினைச்சொல்லுக்குத் தரப்படுகிறது.அடுத்து ‘SPB sang only a melody song in the auditorium yesterday’ என்றால் அவர் குத்துப் பாட்டு பாடவில்லை. ஒரு மெலடி பாட்டுதான் பாடினார் எனப் பொருள்படும். இங்கு முக்கியத்துவம் மெலடி சாங் என்ற ஆப்ஜெக்ட்டுக்கு தரப்படுகிறது.

அடுத்து ‘SPB sang a melody song only in the auditorium yesterday’ என்றால் அவர் ஆடிட்டோரியத்தில் தான் பாடினார். விளையாட்டு மைதானத்தில் பாடவில்லை எனப் பொருள் தரும். இங்கு முக்கியத்துவம் ஆடிட்டோரியம் என்ற ப்ளேஸ் அட்வேர்ப்புக்கு தரப்படுகிறது.

அடுத்து ‘SPB sang a melody song in the auditorium only yesterday.or yesterday only’ என்றால் அவர் நேத்துதான் பாடினார். முந்தாநேத்து இல்லை எனப் பொருள்படும். இங்கு முக்கியத்துவம் நேற்று என்ற டைம் அட்வேர்ப்புக்கு தரப்படுகிறது. கடைசி வார்த்தைக்கு மட்டும் ‘only’ என்ற வார்த்தையை முன்போ அல்லது பின்போ போடலாம். பொருள் மாறுபடாது”என்று விளக்கினார்.ரகுவை ஆச்சரியத்துடன் பார்த்த ரவி,“சூப்பர் சார். I must thank you only sir… not anybody” என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றான்.