அழகப்பா பல்கலையில் 26 துறைகளில் எம்.பில் படிப்பு!



அட்மிஷன்

காரைக்குடியில் 440 ஏக்கர் நிலப்பரப்பில் 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 34 துறைகள், 7 மையங்கள் மற்றும் 2 உறுப்புக் கல்லூரிகள் இருக்கின்றன. இப்பல்கலைக்கழகத்துடன் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருக்கும் 40 கல்லூரிகள் இணைவு பெற்றுச் செயல்பட்டுவருகின்றன.

இப்பல்கலைக்கழகத்தின் கீழ் கீழக்கரையில் ஒரு தன்னாட்சிக் கல்லூரியும், பரமக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக மாதிரிக் கலை அறிவியல் கல்லூரி ஒன்றும் செயல்பட்டுவருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.  எம்.பில் படிப்பு: இப்பல்கலைக்கழகத்தில் Tamil, English, Women’s Studies, Economics, Library and Information Science, History, Education, Physical Education, Media & Communication, Commerce, International Business, Management, Bank Management, Corporate Secretaryship, Logistic Management, Mathematics, Physics, Chemistry, Computer Science, Bioinformatics, Bioelectronics, Nanaoscience & Technology, Oceanography & Coastal Area Studies, Zoology, Botony, Microbiology என 26 துறைகளில் முழுநேர எம்.பில் படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும் Physics, Chemistry ஆகிய துறைகளில் வார இறுதி நாட்கள் படிப்பாக எம்.பில் படிப்புகள் இருக்கின்றன. இவை தவிர, இப்பல்கலைக்கழகத்தில் மருந்து மரபணுத் தொகுதிக்கல்வி அமைப்பு (P.G. Diploma in Structural Pharmacogenomics) எனும் முதுநிலைப் பட்டயப்படிப்பு ஒன்றும் உள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டினைப் பெற ”The Registrar, Alagappa University” எனும் பெயரில் காரைக்குடியில்  மாற்றத்தக்க வகையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் உரிய சான்றிதழ் நகலுடன் ரூ.250க்கும், பிற பிரிவினர் ரூ.500க்கும் வங்கி வரைவோலையினைப் பெற்று வேண்டுதல் கடிதத்துடன் காரைக்குடியிலுள்ள பல்கலைக்கழக அலுவலகத்தில் நேரில் கொடுத்தும், “The Registrar, Alagappa University, Karaikudi - 630003” எனும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.

பல்கலைக்கழகத்தின் http://alagappauniversity.ac.in எனும் இணையதளத்தில் இணைய வழியிலும் அதில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியும் விண்ணப்பம் செய்ய முடியும். இணையம் வழியில் விண்ணப்பிக்கவும், நிரப்பப்பட்ட விண்ணப்பம் பல்கலைக்
கழக அலுவலகத்திற்குச் சென்றடையவும் வேண்டிய கடைசி நாள்: 3.7.2017.

நுழைவுத்தேர்வு: எம்.பில் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் காரைக்குடியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 16.7.2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்பெறும். நுழைவுத்தேர்வுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்படிப்புகளில் சேர்வதற்கான கல்வித்தகுதி, மாணவர் சேர்க்கை போன்ற மேலும் கூடுதல் தகவல்களுக்கு மேற்காணும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது பல்கலைக்கழகத்தின் 04565 - 223111, 223113 எனும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறலாம்.   

  - முத்துக்கமலம்