மத்திய அரசில் 6578 வேலை வாய்ப்பு



ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுக்கு ரெடியா?

மத்திய அரசின் காலிப் பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்புவதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் அமைப்பு. தற்போது மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள போஸ்டல் அசிஸ்டன்ட்/சார்டிங் அசிஸ்டன்ட்ஸ், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்ப இந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போஸ்டல் அசிஸ்டன்ட்/சார்டிங் அசிஸ்டன்ட் பணிக்கு 3523 பணியிடங்களும் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 2049 பணியிடங்களும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 1006 பணியிடங்களும் உள்ளன. பிளஸ் 2 படித்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. +2 மட்டுமே படித்தவர்கள்கூட மத்திய அரசு அலுவலகங்களில் கௌரவமான பணியிடங்களில் அமர்வதற்கான வாய்ப்பு இது. ‘கம்பைண்ட் ஹையர் செகண்டரி லெவல் (10 +2) எக்ஸாமினேஷன் 2015’ என்ற தேர்வின் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பள விவரம்: அசிஸ்டன்ட்/சார்டிங் அசிஸ்டன்ட் பணிக்கு: பே பேண்ட் 1 - ரூ.5200-20200 + கிரேட் பே 2400.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு:  பே பேண்ட் 1 - ரூ.5200-20200 + கிரேட் பே 2400.
லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு:  பே பேண்ட் 1 - ரூ.5200-20200 + கிரேட் பே 1900.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு:  பே பேண்ட் 1 - ரூ.5200-20200 + கிரேட் பே 1900.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.8.2015 தேதியில் 18 வயதினைக் கடந்தவராகவும் 27 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2.8.1988 மற்றும் 1.8.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வியில் (12-ம் வகுப்பில்) அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பித்தவர்கள் எழுத்துத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த எழுத்துத் தேர்வு நான்கு பகுதிகளைக் கொண்ட இரண்டு பிரிவுகளாக நடைபெறும். ஒரே நாளில் இரண்டு பிரிவு தேர்வும் நடைபெறும். முதல் பிரிவு தேர்வு காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இதில் இரண்டு பகுதிகளுக்கான பாடப்பிரிவுகளில் வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் பிரிவு தேர்வு மதியம் இரண்டு மணி முதல் 4 மணி வரை நடைபெறும். இதில் இரண்டு பகுதிகளுக்கான பாடப்பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

முதல் பிரிவில் ஜெனரல் இன்டலிஜன்ஸ் மற்றும் இங்கிலீஷ் லாங்குவேஜ் பாடப்பிரிவுகளிலும், இரண்டாம் பிரிவில் க்வான்டிடேடிவ் ஆப்டிடியூட் மற்றும் ஜெனரல் அவேர்னஸ் பாடப்பிரிவுகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். ஆப்ஜெக்டிவ் டைப் வினாக்களே கேட்கப்படும். அதோடு நெகடிவ் மதிப்பெண்களும் உண்டு என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தவறான விடைகள் ஒவ்வொன்றுக்கும் கால் மதிப்பெண் குறைக்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாத்தாள் அமைந்திருக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தட்டச்சு தேர்வு, திறமைத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அசல் மதிப்பெண் சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும்.

கட்டணம்: விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் செலுத்தலாம். ஆஃப்லைன் முறைகளில் கட்டணம் செலுத்து பவர்கள் குறுக்கீடு செய்யப்பட்ட மத்திய ஆட்தேர்வு அஞ்சல் முத்திரையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் ஆன்லைன் செலானை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் ஆன்லைன் மற்றும் தபால் முறைகளில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் பார்ட்-1 மற்றும் பார்ட்-2 முறைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தபால் வழியில் விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்து நிரப்பி அனுப்ப வேண்டும். அதில்
மார்பளவு புகைப்படம் ஒட்டி, கட்டண முத்திரை மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அந்தந்த பகுதி அதிகாரி அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.7.2015.
தேர்வு நடைபெறும் நாட்கள்: 1.11.2015, 15.11.2015 மற்றும் 22.11.2015.
கூடுதல் தகவலுக்குக் காண்க:  http://ssconline.nic.in