நிலவியல் படிப்புக்கு உலகெங்கும் வேலைவாய்ப்பு



பூமிப்பரப்பில் உள்ள நிலம், அதன் இயல்புகள், அதன்மீது வசிக்கும் மக்களின் வாழ்க்கைப் பண்புகள் பற்றி படித்தறிய உதவும் அறிவியலின் ஒரு பிரிவே நிலவியல்/புவிப்பரப்பியல் (Geography). புவியின் மீது பரவியுள்ள பல்வேறு தாவர, விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிர்கள்... புவியின் பல்வேறு அம்சங்களான நீர்நிலைகள், மலைகள், பாலைவனங்கள், தீவுகள், எரிமலைகள் போன்றவற்றைப் பற்றி மிகத் தெளிவாக நாம் அறிந்துகொள்ள பேருதவியாக விளங்குவது நிலவியல் துறைதான். இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், இத்துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள், சாதனையாளர்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

“மண்ணின் தன்மை, அதன் உள்ளே புதைந்திருக்கும் தனிமங்களின் நிலை, பயன்பாடு என பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான நிலத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள பயன்படுகின்றது நிலவியல் துறை. இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் விதம், ஏற்படக் காரணம், விளைவுகள் போன்றவற்றை திறம்பட எடுத்தியம்பும் ஆற்றல் பெற்ற சிறந்த துறைகளுள் இதுவும் ஒன்று. மனிதனின் செயல்பாடுகளால் இவ்வுலகின் அமைப்பு நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றது, மனித இனமும், பிற உயிரினங்களும் முற்றிலும் அழிந்துவிடாமல் காப்பதற்கு இத்துறையின் ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன. வேலைவாய்ப்பு மிகுந்த இப்படிப்பை மாணவர்கள் தாராளமாகத் தேர்வு செய்யலாம்.

நிலவியல் துறை சார்ந்த படிப்புகள்/ பிரிவுகள்

Phyto Geography - தாவர நிலவியல்
Zoo Geography - விலங்கின நிலவியல்
Physical Geography - இயற்பியல் நிலவியல்
Climatology - காலநிலையியல்
Coastal Geography - கடற்புற நிலவியல்
Glaciology - பனியியல்
Oceanography - கடலியல்
Palaeo Geography - தொல் நிலவியல்
Human Geography - மனித நிலவியல்
Behavioral Geography - நடத்தை நிலவியல்
இப்பிரிவுகளில் படிக்கலாம்

B.Sc., M.Sc., M.Phil., Ph.D., B.S., M.S., D.Phil., D.Sc.,சிறந்த நிலவியல் துறை/ பிரிவைக் கொண்ட இந்திய கல்வி நிறுவனங்கள் சில...

மாநிலக் கல்லூரி, சென்னை
யுனிவர்சிட்டி ஆஃப் புனே, மகாராஷ்டிரா
பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி
சிவாஜி யுனிவர்சிட்டி, கோலாப்பூர்
யுனிவர்சிட்டி ஆஃப் ஜம்மு, ஜம்மு காஷ்மீர்
நார்த் ஈஸ்டர்ன் ஹில் யுனிவர்சிட்டி, அசாம்
பஞ்சாப் யுனிவர்சிட்டி, சண்டிகர்
யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸ், சென்னை
உஸ்மானியா யுனிவர்சிட்டி, ஆந்திரப்பிரதேசம்
பாரதிதாசன் யுனிவர்சிட்டி, திருச்சி

உலக அளவில் நிலவியல் துறையைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள்

யுனிவர்சிட்டி ஆஃப் கேம்ப்ரிட்ஜ், இங்கிலாந்து (www.cam.ac.uk)
தி யுனிவர்சிட்டி ஆஃப் செஃபீல்டு, இங்கிலாந்து (www.sheffield.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து (www.ox.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் ஓரிகான், அமெரிக்கா (www.uoregon.edu)
யுனிவர்சிட்டி ஆஃப் கன்னெக்டிகட், அமெரிக்கா (www.uconn.edu)
டர்ஹாம் யுனிவர்சிட்டி, இங்கிலாந்து (www.dur.ac.uk)
யுனிவர்சிட்டி ஆஃப் கென்டகி, அமெரிக்கா (www.uky.edu)
கார்ல்டன் யுனிவர்சிட்டி, கனடா (www.carleton.ca)
யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், அமெரிக்கா (www.washington.edu)
இண்டியானா யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.indiana.edu)

நிலவியல் துறையில் சாதித்த இந்திய அறிஞர்கள்

பேராசிரியர் சிபா.பி.சாட்டர்ஜி
பேராசிரியர் வைபவ் காவ்ல்
பேராசிரியர் மூனிஸ் ராஜா
பேராசிரியர் சசி பூஷன்
பேராசிரியர் குமுத் பிஸ்வாஸ்
பேராசிரியர் ரவி எஸ்.சிங்
பேராசிரியர் இந்திரஜித்
பேராசிரியர் போஃட்னன்
பேராசிரியர் நெகி மோஹிதா
பேராசிரியர் வினாஸ் சந்திர ஜா

பழங்காலம் முதல் உலக அளவில் நிலவியல் துறையில் சாதித்த வல்லுநர்கள்

ஹெராட்டோஸ்தீன்ஸ்
அனாக்ஸிமாண்டர்
லியூ. அனன்
பெய் க்ஸ்யூ
முகம்மது அல் இத்ரிசி
முகம்மது அல் கஸ்கரி
அபு சையத் ஆல்-பால்கி
அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்
ஜான் ஹாரிஸன்
கிறிஸ்டோபர் கொலம்பஸ்

நிலவியல் துறை மாணவர்களை ஊக்குவிக்கவும், ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் உலக அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள்/ குழுக்கள் சில...

தி ராயல் ஜியோகிராபிக்கல் சொசைட்டி, இங்கிலாந்து
அமெரிக்கன் ஜியோகிராபிக்கல் சொசைட்டி, அமெரிக்கா
அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கன் ஜியோகிராபர்ஸ், அமெரிக்கா
ராயல் கனடியன் ஜியோகிராபிக்கல் சொசைட்டி, கனடா
அன்டோன் மெலிக் ஜியோகிராபிக்கல் சொசைட்டி, ஸ்லோவேனியா
நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி, அமெரிக்கா
இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டியன் ஜியோகிராபர்ஸ், இந்தியா
நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ஜியோகிராபர்ஸ் ஆஃப் இண்டியா
ஜியோகிராபிக்கல் அசோசியேஷன், இங்கிலாந்து
ஆஸ்திரேலியன் ஜியோகிராபி அசோசியேஷன், ஆஸ்திரேலியா

நிலவியல் துறையில் சாதிக்கும் பட்டதாரிகள்/ ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/பதக்கங்கள்/விருதுகள்

வாட்ரிஸ் லட் ப்ரைஸ், அமெரிக்கா
விக்டோரியா மெடல், இங்கிலாந்து
ஜான் லெவிஸ் ப்ரைஸ், ஆஸ்திரேலியா
தி டெஸ்ஸைட் ஃபீல்ட் க்ளப் மெடல், இங்கிலாந்து
தி ராயல் சொசைட்டி மெடல், இங்கிலாந்து
எஸ்.என்.ஐ.சி. கோல்டு மெடல், சிங்கப்பூர்
ஹெச்.எம்.ஸ்டான்லி ப்ரைஸ், அமெரிக்கா
இவ்ரிகலி ஃபேர்சைல்டு மெடல், அமெரிக்கா
யங் சயின்டிஸ்ட் அவார்டு, இந்தியா
பட்நாகர் அவார்டு, இந்தியா

நிலவியல் துறை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில...

ஜுவாலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா, டேராடூன்
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓஷன் சயின்சஸ், சென்னை
கவுன்சில் ஃபார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச், புதுடெல்லி
இண்டியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச், புதுடெல்லி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், புதுடெல்லி
கடல் ஆராய்ச்சி மையங்கள்
ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இண்டியா, டேராடூன்
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்.
அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள்
அரசு மற்றும் தனியார் ஆய்வு நிறுவனங்கள்

அடுத்த இதழில் வேதிப் பொறியியல் (Chemical Engineering)

தொகுப்பு: வெ.நீலகண்டன்