முப்படைகளில் பயிற்சியுடன் வேலை



+2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்திய ராணுவ அகாடமி, இந்திய கப்பற்படை அகாடமி, இந்திய விமானப்படை அகாடமி ஆகியவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணிகளில் சேருவதற்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்தி வருகிறது.2015ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி துவங்க உள்ள தேசிய பாதுகாப்பு படையின் 136வது பயிற்சி வகுப்புக்கும், 2016ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி துவங்க உள்ள இந்திய கப்பற்படை அகாடமியின் 98வது பயிற்சி வகுப்புக்கும் யு.பி.எஸ்.சி. தேர்வு நடத்த உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்: மொத்தம் 375

தேசிய பாதுகாப்பு படை அகாடமி: 320 இடங்கள். இதில் 208 இடங்கள் ராணுவத்துக்கு. 42 இடங்கள் கப்பற்படைக்கும் 70 விமானப்படைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை அகாடமி: 55 இடங்கள்.

கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு

வயது வரம்பு: 2.1.1997க்கு முன்பும், 1.1.2000க்கு பின்பும் பிறந்திருக்கக் கூடாது.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். ஆண்கள், பெண்களுக்கான உயரம், எடை பற்றிய விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள்: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், உடல் தகுதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.7.2015.

ஏர் இந்தியாவில் வேலை

200 பேருக்கு வாய்ப்பு

ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தில் (AIATSL)  புதுடெல்லி தலைமையகத்திலும் வடக்கு மண்டலத்திலும் காலியாக உள்ள 200 பாதுகாப்பு முகவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Air India Air Transport Services (AIATSL)

மொத்த காலியிடங்கள்: 200

பணியிட விவரம்: Security Agent

காலியிடங்கள் விவரம்:
Northern Region - 68
Delhi - 132

சம்பளம்: மாதம் ரூ.13,800.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.7.2015 அன்று காலை 8 மணிக்குநேர்முகத் தேர்வு நடைபெறும் மையம்:
Northern Region - 68, Delhi - 132

Tansit Flats, Near Water Tank, Air India Housing Colony Play Ground, Vasant Vihar, New Delhi 110 057

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை மும்பையில் மாற்றத்தக்க வகையில் Air  India  Air  Transport Services Ltd  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்குக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.airindia.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


கப்பல் படையில் வேலைபேச்சிலர் எஞ்சினியர்களுக்கு வாய்ப்பு!

எஞ்சினியரிங் படித்து முடித்துள்ள திருமணம் ஆகாத ஆண்கள் இந்திய கப்பற்படையில் கமிஷன்ட் ஆபீசர் பிரிவில் யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் கமன்சிங் கோர்ஸ் ஜூன் 2016ல் ஜெனரல் சர்வீஸ்/ பைலட், அப்சர்வர், ஐ.டி., எலக்ட்ரிக்கல், மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பணியில் அமர ஒரு நல்ல வாய்ப்பு. இதற்காக இந்திய கப்பற்படை பயிற்சி மையம் மூலம் (Indian Naval Academy - Ina)  நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கேரளா, எழிமலாவிலுள்ள கப்பற்படை பயிற்சி மையத்தில் 2016 ஜூனில் பயிற்சி தொடங்கும்.

பணியின் விவரம்:
I. Executive Branch
II. Technical Branch (Submarine Specialisation)
III. Submarine Technical

கல்வித் தகுதி, உடல் தகுதிகள், தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விரிவான தகவல்களை விண்ணப்பதாரர்கள் http://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதள தகவல்களை முழுமையாக படித்த பின்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.7.2015.