
தனது பியூட்டி பார்லர் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட இருக்கிறார் நடிகை சோனா. நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறாராம் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

லாரா தத்தாவும் மகேஷ் பூபதியும் இப்போது தம்பதிகள். கடந்த வாரம் கோவாவில் பிரபல டென்னிஸ் வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் முன்னிலையில் நடந்தது திருமணம். ‘முதல் முறை உன்னைப் பார்த்ததிலிருந்தே இந்த நாளுக்காக கனவுகளோடு காத்திருந்தேன்’ என மகேஷ் பூபதி பரவசப்பட, ‘வாழ்நாள் முழுக்க நாம் இதே காதலோடு இணைந்திருப்போம்’ என லாரா ஆனந்தக் கண்ணீரோடு சொல்ல... நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக முடிந்தது திருமணம்.

சிம்புவின் தங்கை இலக்கியாவுக்குத் தீவிரமாக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரது திருமணத்தை அடுத்தே சிம்புவுக்காம்.

டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினியைப் பார்த்தது முதல் பரவசத்தில் இருக்கிறார் அஜய் தேவ்கன். அஜய் தேவ்கனின் அப்பா வீரு தேவ்கன், முன்பு ரஜினி நடித்த இந்திப் படங்களில் பணியாற்றியவர். அப்போது குழந்தையாக இருந்த அஜய், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியுடன் விளையாடி இருக்கிறார். ‘அப்போது பார்த்ததற்கும் இப்போதும் அவரிடம் துளியும் மாற்றமில்லை. அவர் இந்தியாவுக்கு மட்டுமில்லை; உலகத்துக்கே சூப்பர்ஸ்டார்’ என்று புகழ்கிறார் அஜய்

விழாக்களில் கலந்து கொள்வதை நிராகரிப்பதைப் போலவே வெளியிடங்களுக்குச் செல்வதையும் பெரும்பாலும் தவிர்த்து விடும் அஜித்தின் பாலிஸியில் இப்போது மாற்றம். ‘மங்காத்தா’ வெங்கட் பிரபு டீமோடு அடிக்கடி ரவுண்ட்ஸ் விடுகிறார்.

மாதவனோடு நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் ஷூட்டிங்கின்போது பல நாட்கள் ஜுரத்தில் அவதிப்பட்டாலும், ரிலீஸ் தேதி நெருங்கியதால் மருந்து சாப்பிட்டுக்கொண்டே நடித்துக் கொடுத்திருக்கிறார் கங்கணா. அவரது ஈடுபாட்டைக் கண்டு எல்லோருமே நெகிழ்ந்தார்களாம்.