‘வெக்கையையும் வேர்வையையும் சட்டை செய்யாமல் அடுப்படி அனல்ல நிக்கற ஒவ்வொரு சமையல் தொழிலாளிக்கும் நான் பெற்ற விருதை அர்ப்பணிக்கிறேன்’ என்று கலைமாமணி ரமேஷ்வர சர்மா சொல்லியுள்ளது மனநிறைவு.
-கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-24.
ரெடிமேட் இட்லி & தோசை மாவுகள் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிப்பவை என்று எச்சரித்த கட்டுரை மாவரைக்க சோம்பல்படுபவர்களுக்கு நல்ல சூடு!
- த. சத்தியநாராயணன், சென்னை-38.
ஒருபக்கக் கதைகள் அனைத்தும் அருமை. கறுப்பு வெள்ளையில் கதைகளுக்கு டிஸைன் செய்திருந்த ஓவியங்கள் பிரமாதம்!
-ஏ.எஸ்.யோகானந்தம்,
ஔவையார்பாளையம்.
உலகக்கோப்பை இந்தியாவுக்கே கிடைக்கும்னுதான் எல்லோரும் நினைப்பாங்க. ஆனா, ‘த்ரில் இருக்கணும். போராடித்தான் ஜெயிக்கணும்’னு தல சொன்னதுதான் நச். இதேமாதிரி எல்லா விளையாட்டும் ரசிக்கப்படணும்னு சொன்னது சூப்பர் நச்!
-எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
மணம் மிகும் நெய்ச்சூட்டில் முழு முந்திரிப்பருப்புகளை வறுத்து, தேன் சொட்டில் தொட்டுச் சுவைத்த ருசியோடு இருந்தது உணவு ஸ்பெஷல்!
-ஆழகு மங்கை திருவண்ணாமலை.
என்றும் இளமையாக இருக்க ஊட்டச்சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன் தந்த இளமை டிப்ஸ் 20ம் ஆரோக்கிய அற்புதம்!
-ஆர்.சுந்தர், திருச்சி.
தாழ்வு மனப்பான்மையை விட்டு, மனைவிக்கு உதவி செய்வதால் வாழ்வில் முன்னேறலாம் என்பதற்கு சில்வர் ராமசாமி ஓர் எடுத்துக்காட்டு! அவரை ‘கோல்டு ராமசாமி’ என்றால் அது மிகையாகாது!
-எம்.ஜி.பரத், திண்டுக்கல்.
உடலை இளைக்கச் செய்கிற சத்து பானங்கள், மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி பக்காவாக விளக்கியுள்ளதைப் படித்து கிலி ஏற்பட்டதுங்க. இருந்தாலும் இது ஒரு நல்ல எச்சரிக்கை கட்டுரை தலைவா!
-எம்.சார்லஸ், புதுச்சேரி.
ஸ்ரீபெரும்புதூரில் கருணாஸ் நடத்துவது ‘திண்டுக்கல் சாரதி மெஸ்’. நீர் ‘நியூஸ் வே’யில் சொல்லியிருப்பது போல ‘லொடுக்கு பாண்டி மெஸ்’ அல்ல. போர்டையே பார்க்காம சாப்பிட்டுட்டு வந்திட்டீரோ?
-ஆர்.நாகராஜன், சென்னை-56.
‘மாத்தி யோசி’ பகுதி துருப் பிடிச்சுப் போயிருந்த மூளைக்கு எண்ணெய் போட்ட மாதிரி இருக்கு!
-டி.வி.சுகுமாரன், சிவகங்கை.
அய்யா பாப்பையா எப்படி பட்டை தீட்டிய வைரமா ஜொலித்தார் என்பதைப் படித்து நெகிழ்ந்தோம். கூட்டத்தினரை கொக்கி போட்டு இழுக்க முடியாது. இந்த ஜாம்பவான் தன்னைக் கொஞ்சம் தாழ்த்திக் கொள்வதில் என்றுமே கவலைப்பட்டதில்லை என்பது கட்டுரைக்கு கூடுதல் சிறப்பு.
-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.