வாசகர் கவிதைகள்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

மரணம்

அடித்துச் சாத்திய கதவில்
உயிரோடு அறையப்பட்ட
வண்ணத்துப்பூச்சி!
 பா.விஜயராமன்,
வடபாதிமங்கலம்.

ஞாபகம்

பத்து வருடங்களுக்குமுன்
எடுக்கப்பட்ட புகைப்படங்களை
எப்போது பார்த்தாலும்
குழுவினரிலிருந்து சரியாய்
அப்பாவை அடையாளம் காட்டிட
யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்
இரண்டு வயதுக் குழந்தைக்கு?
ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை&90.

மாரிக்காலம்!

ஒவ்வொரு மாரிக்காலமும்
தொடங்குகிறது,
பள்ளிக்கூட நோட்டில்
நடுப்பக்கம் கிழித்து
கப்பல் செய்துவிடும்
சிறுவர்களோடு!
 பெ.பாண்டியன், காரைக்குடி.

பக்தி

கோயிலில்
வழக்கத்தைவிட
கூட்டம் அதிகம்,
காதலர் தினம்
என்பதால்...
 பி.என்.ஜெயசங்கர்,
திருவாரூர்.

சுதந்திரம்

ஒரு விரலசைப்பும்
இரண்டு நெல்மணிகளும்தான்
ஜோதிடக்கிளிகளுக்கு
சுதந்திரம் என்பது!
 கமருதீன், தஞ்சை.

மௌனம்

மரத்தில்
பறவைகளின் கூச்சலைக்கூட
தாங்கிக்கொள்ள முடிந்தது!
ஆனால் முடியவில்லை
மரம் வெட்டப்பட்ட
இடத்தில் நிலவும்
மௌனத்தின் அலறலை!
 ப.உமாமகேஸ்வரி,
நெய்வேலி.

செயற்கை

கிராமத்திற்குள்
குடிபெயர்ந்த நகரங்கள்...
ஃபிரிட்ஜிலிருந்து
குளிர்பான உபசரிப்பு!
 மலர்மகள், மதுரை.