பளிச் பர்கர்!
மழைக் காலத்தில் வாகனங்களைப் பராமரிக்கும் டிப்ஸ் அத்தனையும் முத்துக்கள். காலாகாலத்துக்கும் படித்துப் பயன்பெற பத்திரப்படுத்திவிட்டேன்! - கோ.சு.சுரேஷ், கோவை.
பார்த்தீனியம் செடிகளின் விஷத்தன்மை அறிந்து அதிர்ந்தோம். அதை ஒழிக்க முருகானந்தம் கண்டுபிடித்திருக்கும் ‘கில்லர்-700’ மருந்துக்கு வந்தனம்! - எச்.பரிமளகுமார், புதுச்சேரி.
டைரக்டர் பாண்டிராஜ் பேட்டி ‘கதகளி’ ஆட்டம் ஆடியது. மெட்ராஸ் படத்தில் மேக்கப் இன்றி கேஷுவலாக வந்த கேத்ரீன் தெரஸா இதில் பளிச் பர்கராக பல்ஸ் ஏற்றுகிறார்! - டி.எல்.ஸ்டீபன் சார்லஸ், சாத்தூர்.
விழித்துக்கொண்டே தூங்கியது போதும்... இனி தூங்கும்போதும் விழித்திருக்க வேண்டும் எனச் சொல்லாமல் சொன்னது ‘கொட்டித் தீர்த்த மழை... கோட்டை விட்ட அரசு’ கட்டுரை. - ரத்தினமாலா, வடவள்ளி.
‘உலகின் மிக செக்ஸியான குள்ளப் பெண்’ கரினாவின் கவர்ச்சிப் படங்கள் கலக்கல். ஆண்களின் பரிதாபத்தை எதிர்பாராமல் பரவசப்படுத்தும் அவரின் அப்ரோச், அருமை! - எஸ்.முத்துராஜா, சிவகங்கை.
இந்தியா முதன்முதலாக ஏவிய நைக்-அப்பாச்சி ராக்கெட்டையும் அது ஏவப்பட்ட கணத்தையும் நேரில் பார்த்த திருப்தியைத் தந்தது ‘ஆகாயம் கனவு அப்துல் கலாம்’ பகுதி! - டி.வி.குருசங்கர், தஞ்சாவூர்.
மறைந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பசுமை நினைவலைகளை ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா பகிர்ந்துகொண்ட விதம் கண்கள் பனிக்கச் செய்தது! - பி.கே.சண்முகநாதன், சேலம்.
என்னது... ஒரு ரூபாய்க்கு சாப்பாடா! லாபம் கருதாமல் பல வறியவர்களின் வயிற்றை நிரப்பி வரும் ஈரோடு ‘ ஏ.எம்.வி. மெஸ்’ வெங்கட்ராமன் பல்லாண்டு வாழ வேண்டும்! - கே.எல்.குணசுந்தரி விநாயகம், சென்னை.
சுழல்விளக்கு வி.ஐ.பிகளை ‘கைம்மண் அளவு’ பகுதியில் சுழற்றி வீசிவிட்டார் நாஞ்சில் நாடன். ‘இன்று ஒருவன் வி.ஐ.பி ஆவது எளிது... மனிதனாய் இருப்பதே கடினம்’ என்றது நச்! - ஆர்.சேகர், மதுரை.
‘படிச்சு என்னவா ஆகப் போறீங்க?’ என்ற கேள்வியும் அதற்கு தரப்படும் பதில்களும் ‘நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று’ என்பதை நமக்குப் புரியவைத்து விடுகின்றன @ நினைவோ ஒரு பறவை! - ஆர்.பசுபதி, காங்கேயம்.
வாரா வாரம் ‘நான் உங்கள் ரசிகன்’ பகுதியை சும்மா தெறிக்க விடுகிறார் மனோபாலா. ஒவ்வொரு வாரமும் தொடரில் சஸ்பென்ஸ் வைத்து ஆர்வத்தை அதிகப்படுத்துறீங்க! - எஸ்.மணிகண்டன், தேனி.
|