வலைப்பேச்சு



@ItzDs 
மனிதன், பணத்தைத் தவிர மற்ற அனைத்தையுமே, தேவை வந்தால் மட்டுமே தேடிச் செல்கிறான்.

ரெண்டாவது மாடி மட்டும்தான் போகும்! முதல் மாடி, கிரவுண்ட் ஃப்ளோர் போறவங்கல்லாம் பின்னாடி வர்ற நீர்மூழ்கிக் கப்பல்ல ஏறிக்கோங்க!

@6SayS
பத்து வருஷமா ரேஷன் கார்டு அடிக்கறதுக்குக்கூட அரசுக்கு நேரமில்லாம பிசியா இருக்கு!

@chevazhagan1 
எவரையும் அதிகாரம் செய்யாதீர்... அது எவருக்கும் பிடிக்காது! ஏனெனில் அதில் காரமிருக்கிறது!!

வெயில் காலத்தில் வரும் மழைக்கும், மழைக் காலத்தில் வெயிலுக்கும்தான் மதிப்பு! # இதுல இருந்து என்ன தெரியுது? அதிகமா கிடைக்கற ‘எதுக்குமே’ மதிப்பில்லை!
- ஷர்மிளா ராஜசேகர்

@senthilcp 
அமீர்கான் + கமல் = நான் இந்த நாட்டை விட்டே போய்டலாம்னு இருக்கேன் மோடி = நான் அப்பப்ப வந்துட்டுப் போய்க்கிட்டு இருக்கேன்

@indiavaasan
விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு, அவதூறு வழக்கு... இவற்றில் கின்னஸ் சாதனையை நோக்கி தங்கத் தாரகை அரசு!

புத்திசாலிகளுடனும் நட்பு அவசியப்படுகிறது. முட்டாள்களுடனும் நட்பு அவசியப்படுகிறது. இருவருமே வாழ்க்கை எதுவென உணர்த்துகிறார்கள்.
- ஈரோடு கதிர்

@iam_thotta 
கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும். அந்த கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால் மட்டும் முடியும்.

தமிழகத்திற்கு தற்போது தண்ணீர் திறந்து விடமுடியாது: கர்நாடகா தண்ணி திறந்து விட்டா கொலை கேசுல உள்ள போவீங்க...

அம்மா மிக்ஸி
அம்மா உணவகம்
அம்மா ஃபேன்
அம்மா வீடு
அம்மா மழை
அம்மா தண்ணி
அம்மா வீட்டிலேயே மீன்
 வளர்க்கும் திட்டம்

@HAJAMYDEENNKS 
பக்கத்து வீட்டுல யார் இருக்காங்கன்னு  தெரியாட்டி அது நகரம்; பக்கத்து வீட்டுல என்ன சாப்பாடுன்னு  தெரிஞ்சா அது கிராமம்!

சில தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டிருந்தாலும் ஆசிரியர்களை மட்டும் வரச்சொல்லி இருந்தன. இதற்கு ஒரு சிறுவனின் கமென்ட்... ‘‘சனிக்கிழமை கிளாஸ் வச்சாங்கல்ல? அதுக்கு பனிஷ்மென்ட்!’’
- பிச்சைக்காரன் எஸ்ஜிஎல்

‘‘ஏங்க, அவர் ஆயிரம் ரூபா கடன் கேட்டதுக்கு இல்லைனு சொல்லிட்டீங்களே... ஏன்?’’
‘‘மழை நின்னதும் திருப்பித் தர்றேன்னு சொல்றாரே!’’
- கார்ட்டூனிஸ்ட் முருகு

இந்த போர்க்கால நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும்போது, நிஜத்துல போர் வந்தா ‘பெப்பரப்பே’தான்...

இந்த மழைக்கே ஸ்தம்பித்துப் போய் நிற்கும் அரசுகதான் கூடங்குளம் உள்ளிட்ட அணு உலைகள் வெடித்துச் சிதறினால் ஓடிவந்து மக்களைக் காப்பாத்துமாம்...

@ThanjaiSabari
அமீர்கான் பொண்டாட்டி, இந்த நாட்ல வாழவே பயமா இருக்குன்னு சொல்லுச்சாம். அவனவனுக்கு பொண்டாட்டிகூட வாழவே பயமாருக்குடான்னா...

 வெள்ள நிவாரணப் பணிகள் முடியாத நிலையில் கடலூரில் தங்கியிருந்த 6 அமைச்சர்கள் திடீர் மாயம்.
# மத்திய அரசு வெள்ள நிவாரணத்துக்கு 1000 கோடி தருவதாக சொன்னார்கள் இல்லையா, அதான் வாங்கிட்டு வரப் போயிருப்பாங்க!
- இளையராஜா டென்டிஸ்ட்

சகிப்புத் தன்மை இல்லைன்னு சொன்னவன நாட்ட விட்டு போடான்னு சொல்றது சகிப்புத் தன்மைல வருமா, இல்லையா?
- ரிட்டயர்டு ரவுடி

இந்தப் பிரச்னையிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறது... தாம் இருப்பது திருவள்ளூர் மாவட்டமா, காஞ்சிபுரம் மாவட்டமா என்பதே பலருக்கு இப்போதுதான் தெரிய வந்துள்ளது. ‘‘மெட்ராஸில் வேலை பார்க்கிறேன்’’ என தம் கிராமத்தில் பந்தாவாகச் சொல்லும் பலருக்கு எந்த மாவட்டம் என்பது தெரியாது.
- பிச்சைக்காரன் எஸ்ஜிஎல்

@gpradeesh 
‘செய்வீர்களா? செய்வீர்களா?’னு கேட்டு ஓட்டு வாங்கிட்டுப்  போனவங்ககிட்ட மக்களும் அதேதான் கேக்குறாங்க. ஏதாச்சும் உருப்படியாய்  செய்வீர்களா?

@Jvs2020  
‘சென்னையின் இன்றைய இன்றியமையா தேவையானது மழைநீர், சாக்கடை நீர் வடிகால் கட்டமைப்புகளே; பிறகுதான் மெட்ரோ & மோனோ இவையெல்லாம்’ என சொல்கிறது மழை...

தன் வாழ்நாளில் பெண்களை குறுகுறு என்று பார்ப்பதிலேயே ஒரு வருடத்தை வீணடித்து விடுகிறார்களாம் ஆண்கள்... ஒரு சர்வே சொல்லுது!
- இளையராஜா டென்டிஸ்ட்

‘‘கார் வாங்கணும்னு யோசிச்சிட்டே இருந்தேன்...’’
‘‘சரி, வாங்கிட வேண்டியதுதானே?’’
‘‘வாங்கிடலாம்... ஆனா இப்ப இருக்கிற நிலைமையில...’’
‘‘என்னடா நிலைமை?  என்ன கார் வாங்குறதுனு யோசனையா?’’
‘‘இல்லை! இப்ப இருக்கிற நிலைமையில... பேசாம நீர்மூழ்கிக் கப்பலாவே வாங்கிட்டா நல்லா இருக்கும் இல்ல!’’

மழை பெய்யுமா, பெய்யாதான்னு கூட சொல்ல வேண்டாம்... துணி துவைக்கலாமா, வேண்டாமான்னு மட்டுமாச்சும் தெளிவா சொல்லுங்க ஆபீஸர்ஸ்... முடியல!
-தேவி செல்வராஜன்

@BoopatyMurugesh
பொண்டாட்டினா வீட்ட பிரிச்சு கூட்டிப் போகும்னு சொல்லுவாங்க... அமீர்கான் பொண்டாட்டி நாட்ட பிரிச்சு கூட்டிப் போகுது!
# நல்ல டெவலப்மென்ட் கேர்ள்ஸ்

கோடிக்கணக்குல செலவு பண்ணி ஊரு சுத்தலாம்னு வந்த மனுஷனுக்கு கோமள விலாஸ்ல கூட்டிட்டுப் போயி ஓட்டை வடை வாங்கிக் குடுத்திருக்கீங்களே... நியாயமா சாரே?
‪#‎ மோடி சிங்கப்பூர் விசிட்‬!
- குமரேஷ் சுப்ரமணியம்

உண்மையில் யார் இல்லாமலும் வாழ்ந்துவிட முடியும். அதை பரஸ்பரம் உணராமல் பார்த்துக்கொள்வதைத்தான் தாம்பத்யம்
என்கிறோம்...
- விக்னேஸ்வரி சுரேஷ்

‏@udaya_Jisnu 
‘‘அந்த சேட்டு கடைல ஏன் அவ்ளோ கூட்டம்?’’
‘‘இங்கு ‘அடகு வைக்கப்
படும்’னு எழுதுறதுக்கு பதிலா ‘படகு விக்கப்படும்’னு எழுதிட்டாங்களாம்!’’

தோல்வியைக் கண்டு பயப்படுவது இல்லை:
ஈ.வி.கே.எஸ்
ஊருக்குள்ள போயி கேட்டுப் பாருங்க... நாங்க அடி வாங்காத ஏரியாவே
கிடையாது!
- திப்பு சுல்தான்

@losangelesram 
உங்க சிஎம்மே மாசம் ஒரு தடவைதான் அரை மணி நேரம் ஆபீஸ் போறாங்க. ஏன் நீங்கல்லாம் டெய்லி போய் டிராபிக் பண்றீங்க? நான்சென்ஸ்!

@fradu_01
பகல் ஃபுல்லா சென்னைய காய விட்டுட்டு, இரவெல்லாம் தண்ணி தெளிச்சு தண்ணி தெளிச்சு அடிக்கறாரு வருண பகவான்!

ஒரு அதிகாலைப் பொழுது! கணவன் மனைவியை எழுப்பிக் கேட்டான்.
‘‘டியர்... யோகா பண்ணப் போறேன். நீயும் வர்றியா?’’
கணவனை வித்தியாசமாகப் பார்த்த அந்த மனைவி, ‘‘ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பைக் குறைன்னு சொல்றீங்க. அப்படித்தானே?’’
‘‘அதுக்கில்லைம்மா... யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!’’

‘‘அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?’’
‘‘இல்லை... இல்லை... நீ வர வேணாம். விடு!’’
‘‘அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!’’
‘‘ஐயோ, இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?’’

‘‘இவ்வளவு நாளா புரிஞ்சுக்காமதான் இருந்தேனா?’’
‘‘மறுபடி பாரு... நான் அப்படிச் சொல்லலை!’’
‘‘அப்படித்தான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?’’

‘‘தயவுசெஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?’’
‘‘ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!’’
‘‘ஓகே! நானும் போகலை. போதுமா?’’
‘‘உங்களுக்குப் போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க...’’

‘‘சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன். சந்தோஷமா?’’
‘‘அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் என்ஜாய் பண்ணணும். அதுக்குத்தானே இவ்வளவும் பேசுனீங்க?’’
வெறுத்துப்போன கணவனுக்கு எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.
திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!