ஜோக்ஸ்
‘‘டாக்டர் ஏன் ஸ்டெதஸ்கோப்பை காதுலேர்ந்து கழட்டவே மாட்டேங்கறாரு..?’’ ‘‘அதுல எம்.பி.3 பிளேயரும் இருக்காமே... அதான்!’’ - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
 ‘‘என் மாமியாரை எதிர் வீட்டுல கௌரவ ஆலோசகரா நியமனம் பண்ணியிருக்காங்க...’’ ‘‘எதுக்கு..?’’ ‘‘அடிக்கடி அந்தம்மாவுக்கு சண்டை ஆலோசனை சொல்லணுமாம்..!’’ - என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.
‘‘இருபது வருஷமா கோமாவில் இருந்து முழிச்ச பேஷன்ட், மறுபடியும் எப்படி கோமாவுல விழுந்தார்?’’ ‘‘இருபது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அதே நர்ஸ் மூஞ்சியை இப்ப முழிச்சதும் பார்த்துட்டாராம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
‘‘கட்சி கையை விட்டு போனதுக்கா தலைவர் கவலையா இருக்கார்?’’ ‘‘கட்சி போனதுகூட கவலை இல்லையாம்... மகளிரணித் தலைவியும் போயிட்டாங்களாம்!’’ - கி.ரவிக்குமார், நெய்வேலி.
‘‘என்னப்பா இது... இன்டர்வியூக்கு வரும்போதே குடிச்சுட்டு வந்து இருக்கே..?’’ ‘‘நான்தான் சொன்னேனே சார்... எனக்கு நிறைய சரக்கு இருக்குன்னு..!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் மன பாரத்தை சாமிகிட்ட இறக்கி வைக்கலாம்னாலும், அதோட ‘வெயிட்’ என்னன்னு யாராலும் சொல்ல முடியாது! - தலை பாரத்தோடு தடுமாறி வாழ்வோர் சங்கம் - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
ஸ்பீக்கரு
‘‘எங்கள் தலைவருக்காக ஒழுங்கு மரியாதையுடன் கூட்டணிக்கான கதவை திறந்து விடுங்கள். இல்லையேல், அவர் தனது பழைய தொழில்முறைப்படி பூட்டை உடைத்து உள்ளே நுழைய வேண்டி வரும் என்பதை...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
|