ஜோக்ஸ்



‘‘பொண்ணு ரொம்ப சாது! நீங்க எவ்வளவு திட்டினாலும் அமைதியா இருப்பா...’’
‘‘செல்போன் கஸ்டமர் கேர்ல வேலை செய்யறாங்களா..?’’
- பி.பாலாஜி கணேஷ்,
கோவிலாம்பூண்டி.

‘‘அண்ணன் தம்பி சண்டையில் உன்னை எதுக்குப் பாராட்டறாங்க?’’
‘‘அவங்க போட்ட முழுச் சண்டையையும் பொறுமையா வேடிக்கை பார்த்தேனாம்...’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

தத்துவம் மச்சி தத்துவம்

‘குருவிக்கூட்டை’ தினமும் பார்த்து ரசிக்கலாம். ‘எலும்புக் கூட்டை’ தினமும் பார்த்து ரசிக்க முடியுமா?
- பேய்ப் படம் பார்த்து பார்த்து சிந்தை கலங்கி விட்டவர்கள் சங்கம்
- இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.

‘‘நீங்க சொல்ற பேய்க் கதை பயப்படற மாதிரியே இல்லையே..?’’
‘‘எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் மேக்கப் இல்லாம நடிக்க வச்சிடுவோம். ஆடியன்ஸ் பயந்துடுவாங்க சார்...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.

ஸ்பீக்கரு...

‘‘எங்கள் தலைவருக்கு மானமில்லை... ரோஷமில்லை... சூடில்லை...
சொரணையில்லை என்றீர்கள்... ஆமாமென்று சும்மா இருந்துவிட்டோம். இப்போது கூட்டணியில் இடமுமில்லை என்கிறீர்களே?’’
- சி.சாமிநாதன், கோயமுத்தூர்.

‘‘அதோ அங்கே தொங்கறது புழல்ல எடுத்த போட்டோ, இது திஹார்... அது பாளையங்கோட்டை..!’’
‘‘தலைவரே! இது செல்ஃபி மோகமா... ஜெயில் மோகமா..?’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.

‘‘என் மனைவி பேர்ல வீடு வாங்கினது தப்பாப் போச்சு...’’
‘‘ஏன்... என்னாச்சு..?’’
‘‘ஏதாவது சண்டை வந்தா என்னை ‘காலி பண்ணிடு
வேன்’னு சொல்றா!’’
- வி.சாரதி டேச்சு,
சென்னை-5.